Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலவசங்கள் குறித்து கிண்டல்.. கமெண்ட்ரியின் போது சடகோபன் ரமேஷ் சர்ச்சை பேச்சு.. கடுப்பான ரசிகர்கள்

சென்னை: ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியின் போது கிரிக்கெட் வர்ணனையாளர் சடகோபன் ரமேஷ் இலவசங்கள் குறித்து கிண்டலாக பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவருக்கு எதிராக தமிழக ரசிகர்கள் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி கண்ட சூழலில் 2வது போட்டியில் படு மோசமாக தோல்வியடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்களுக்குள் 117 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் இலக்கை எட்டி வெற்றி கண்டது.

 ரோகித் விளக்கம்

ரோகித் விளக்கம்

இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன. நல்ல ஸ்கோர் அடிக்கக்கூடிய பிட்ச்- தான், ஆனால் சுப்மன் கில் அவுட்டானவுடன் பதற்றத்தில் விக்கெட்களை பறிகொடுத்துவிட்டோம். இனி வீரர்களின் பதற்றத்தை குறைத்து கம்பேக் தருவோம் என ரோகித் சர்மா விளக்கம் அளித்திருந்தார்.

புது பிரச்சினை

புது பிரச்சினை

தோல்வியடைந்த கோபத்தில் ரசிகர்கள் இருக்கும் நிலையில், தற்போது புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது. ஆட்டத்தின் 16வது ஓவரின் போது அக்‌ஷர் பட்டேல் பேட்டிங் செய்துக்கொண்டிருக்க, நாதன் எல்லீஸ் பந்துவீசினார். அப்போது ஒரு பந்து மட்டும் நோ பாலாக சென்றது. மோசமான நிலையில் இருந்த இந்தியாவின் ஸ்கோரை ஏற்ற அந்த ஃப்ரீ ஹிட்டை அக்‌ஷர் பயன்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷார்ட் பாலாக வந்த அந்த பந்தில் சிங்கிள் மட்டுமே அடித்தார்.

சர்ச்சை கருத்து

சர்ச்சை கருத்து

இதனை வழக்கம் போல வேடிக்கையாக தமிழில் வர்ணனனை செய்த முத்து, அக்‌ஷர் பட்டேலுக்கு எது இலவசமாக கொடுத்தாலும் பிடிக்காது போல, அதனால் தான் ஃப்ரீ ஹிட்டை சரியாக அடிக்கவில்லை எனக்கூறினார். இதற்கு உடனடியாக பதிலளித்த முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ், அக்‌ஷரை தமிழ்நாட்டிற்கு வரச்சொல்லுங்கள், இலவசமாக கொடுத்தால் பிடிக்கும் எனக்கூறி கிண்டலடித்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது.

கடுப்பான ரசிகர்கள்

கடுப்பான ரசிகர்கள்

தமிழ்நாட்டில் மக்களின் சிரமத்தை உணர்ந்து அரசு கொடுக்கும் இலவசங்களை இப்படியா பொதுவெளியில் மோசமாக கிண்டலடிப்பது, அதுவும் விளையாட்டை பற்றி பேசிக்கொண்டிருக்கும் ஒரு தொலைக்காட்சியில் எதற்காக அரசியலை கொண்டு வருகின்றனர் என ரசிகர்கள் கண்டனங்களை கூறி வருகின்றனர். இதற்கு ரமேஷ் தரப்பில் இருந்து விளக்கம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, March 20, 2023, 13:26 [IST]
Other articles published on Mar 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+