Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரு நீ நம்பர் 1? என்ன ஜோக் காட்றீங்கா? பாபர் அசாமை பொளக்கும் ரசிகர்கள்.. பாகிஸ்தானை தவிக்க விட்டாரு

பெங்களூரு : ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசையில் முதுகெலும்பாக இருப்பவர் பாபர் அசாம்.

பாபர் அசாம் முதன்முறையாக இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.பாபர் அசாம் இந்த உலகக் கோப்பை தொடரில் மூன்று சதம் அடிப்பார் என கௌதம் கம்பீர் கணித்திருந்தார்.

Fans slams Babar azam for losing his wicket for 18 runs vs australia

கௌதம் கம்பீர் ஏதேனும் ஒரு வீரரை பாராட்டினால் அவர் அத்துடன் அவ்வளவுதான் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கை.அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் பாபர் அசாம் இந்த தொடரில் கடுமையாக சொதப்பி வருகிறார். நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதால் அவர் நிச்சயமாக ரன் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தொடரில் அவர் ஒரே ஒரு அரை சதம் தான் அடித்திருக்கிறார்.

நெதர்லாந்து அணிக்கு எதிராக 5 ரன்கள் , இலங்கை அணிக்கு எதிராக பத்து ரன்கள், இந்தியாவுக்கு எதிராக அரைசதம் மட்டுமே பாபர் அசாம் அடித்திருக்கிறார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டத்தில் 368 ரன்கள் இலக்காக நிர்ணயித்திட்டு இருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பாபர் அசாம் தன்னுடைய ஸ்பெஷல் இன்னிங்ஸை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

முதல் விக்கட்டுக்கு பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் 134 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படும் பாபர் அசாம் வெறும் 18 ரன்களில் சாம்பா ஓவரில் ஆட்டம் இழந்தார். இதனால் பாபர் அசாமை கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகிறார்கள். உங்களையா அனைவரும் மிகப்பெரிய பேட்ஸ்மேன் என்று பாராட்டி வருகிறார்கள் என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

மேலும் நம்பர் ஒன்றை நம்பர் ஒன் என்று ஹிந்தி வார்த்தையை பயன்படுத்தி கிண்டல் அடிக்கும் ரசிகர்கள் பாகிஸ்தான் ரசிகர்கள் நினைப்பது போல் பாபர் அசாம் அவ்வளவு பெரிய பேட்ஸ்மேன் கிடையாது என்பதை இந்த தொடர் காட்டுவதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். பாபர் அசாம் இப்படி சொதப்புவதை பார்த்து பாகிஸ்தான் அணி ரசிகர்களை ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்.

Story first published: Friday, October 20, 2023, 21:58 [IST]
Other articles published on Oct 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+