Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேவலமா இல்லையா உங்களுக்கு?? ஷேன் வார்னே குறித்து வந்த விளம்பரம்.. மைதானத்திலேயே கடுப்பான ரசிகர்கள்!

லீட்ஸ்: ஷேன் வார்னே குறித்த விளம்பரத்தால் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இங்கிலாந்து அணி 2 வெற்றிகளுடன் தொடரை கைப்பற்றிவிட்ட சூழலில் கடைசி போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வார்னேவின் விளம்பரம்

வார்னேவின் விளம்பரம்

இங்கிலாந்தின் டெஸ்ட் கம்பேக், நியூசிலாந்தின் விடாப்பிடி போராட்டம் என சுவாரஸ்யமாக நடந்து வரும் இப்போட்டியில் ஒளிபரப்பாளர்களால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. நேரடி ஒளிபரப்பை செய்து வந்த ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் திடீரென ஷேன் வார்னேவின் விளம்பரம் வந்தததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 காரணம் என்ன

காரணம் என்ன

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே, கடந்த மார்ச் மாதம் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரை இழந்த துக்கம் தாங்க முடியாமல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இப்படி இருக்கையில் மறைந்த ஒருவரின் விளம்பரத்தை, தனது சுயலாபத்திற்காக மீண்டும் பயன்படுத்துவது சரிதானா??? என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

என்ன நடவடிக்கை

என்ன நடவடிக்கை

தலைமுடி சம்பந்தப்பட்ட ஒரு க்ளீனிக் குறித்த அந்த விளம்பரத்தில் ஷேன் வார்னே தோன்றிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த செயலுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோர் விவரம்

ஸ்கோர் விவரம்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்பின் ஆடிய இங்கிலாந்து அணி 264/6 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

Story first published: Saturday, June 25, 2022, 18:10 [IST]
Other articles published on Jun 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+