Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஏங்க இப்படி இறங்கிட்டீங்க” ரிஷப் பண்ட்-காக லெஜெண்ட் நடிகை செய்த விஷயம்.. வச்சு செய்யும் ரசிகர்கள்!

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-காக நடிகை ஊர்வசி ரவுத்தேலா செய்த ஒரு விஷயத்தால் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

ரிஷப் பண்ட் - ஊர்வசி ரவுத்தேலா ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு காதலித்து வருவதாக தகவல்கள் பரவின.

எந்தவித சத்தமும் இன்றி இவர்கள் பிரிந்துவிட்ட போதும், ரிஷப் பண்ட் குறித்து சமீபத்தில் ஊர்வசி கூறிய கருத்தால் பிரச்சினை வெடித்தது.

 பண்ட் - ஊர்வசி சண்டை

பண்ட் - ஊர்வசி சண்டை

அதாவது, ஆர்.பி என்ற ஒரு நபர் தன்னை காண நீண்ட நேரம் காத்திருந்துள்ளார். தன்னுடன் பேச 16, 17 முறை கால் செய்துள்ளதாகவும் கூறினார். அந்த ஆர்.பி என்பது ரிஷப் பண்ட் தான் என கூறப்பட்டது. இதற்கு பதிலடி கொடுத்த பண்ட், விளம்பரத்திற்காக இவ்வளவு கேவலமாக பொய் கூறுகிறார்கள், யாரும் நம்பாதீர்கள் எனக் கூறினார். இதனையடுத்து ஊர்வசியும் பதில் கொடுக்க பிரச்சினை வெடித்தது.

மீண்டும் சீண்டல்

மீண்டும் சீண்டல்

இந்நிலையில் எந்த பிரச்சினையுமே நடக்காதது போன்று ஊர்வசி ஒரு விஷயத்தை செய்துள்ளார். அதாவது சொகுசு விமானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு செல்வது போன்று புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், அதில் என்னுடைய காதலுக்காக ஆஸ்திரேலியா செல்கிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் காதல் என ஹார்ட் எமோஜியாக குறிப்பிட்டிருப்பது ரிஷப் பண்ட்-ஐ தான்.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்திய அணி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அந்த அணியில் ரிஷப் பண்ட்-ம் சென்று பயிற்சி பெற்று வருகிறார். இதனால் ரிஷப் பண்ட்-ஐ பார்க்க தான் ஊர்வசி செல்கிறார் என ரசிகர்கள் உறுதிப்படுத்தி வருகின்றனர். மற்றொரு புறம் கடும் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.

குவியும் விமர்சனம்

குவியும் விமர்சனம்

"ரிஷப் பண்ட் அவ்வளவு கேவலமாக பதிலடி கொடுத்தும், எப்படி சுயமரியாதை இன்றி ஆஸ்திரேலியா செல்கிறார்?? அதுவும் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகிறார்" என ரசிகர்கள் படு மோசமாக விமர்சித்து வருகின்றனர். ஊர்வசி ஏற்கனவே பண்ட்-ன் பிறந்தநாளுக்காக வாழ்த்து பதிவு போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, October 9, 2022, 15:05 [IST]
Other articles published on Oct 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+