தமன்னாவுக்கு ரூட் போட்ட விராட் கோலி.. தலைவனோட இந்த வீடியோவை பார்த்து இருக்கீங்களா? ரசிகர்கள் கிண்டல்
மும்பை : சினிமா உலகில் 18 ஆண்டுகளாக வலம் வரும் நடிகை தமன்னா அஜித், விஜய் என தற்போது ரஜினி வரை பல்வேறு ஹீரோக்களுடன் நடித்து விட்டார்.
மேலும் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் கலக்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தமன்னாவுக்கு திடீரென்று ரசிகர்கள் பட்டாளம் எகிறி விட்டது.

இதற்கு காரணம் தமன்னா கொஞ்சம் தாராளமாக நடிக்க தொடங்கியது அவருக்கு பிளஸ் பாயிண்ட் ஆக மாறிவிட்டது. இதனால் ரசிகர்கள் தமன்னா பின்னால் சுற்றத் தொடங்கி விட்டார்கள்.இந்த நிலையில் நடிகை தமன்னாவுக்கு விராட் கோலி ரூட் போட்ட சம்பவமும் நடைபெற்றிருக்கிறது. ஆரம்ப காலத்தில் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்து வந்தபோது தமன்னாவுடன் விளம்பரத்தில் நடித்த போது நட்பில் இருந்திருக்கிறார்.
இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக டேட்டிங் எல்லாம் சென்றிருக்கிறார்கள். ஆனால் இது நட்போடு முடிந்து விட்டதாக தமன்னாவும் விளக்கம் அளித்திருந்தார். அதன் பிறகு விராட் கோலி தன்னுடைய காதல் மனைவியான அனுஷ்கா சர்மா உடன் சுற்ற தொடங்கி விட்டார். இந்த நிலையில் தமன்னாவும் விராட் கோலியும் இணைந்து நடித்த ஒரு விளம்பரம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
அதில் தமன்னாவின் அழகில் மயங்கிய விராட் கோலி தனது தொலைபேசியை காணவில்லை என்றும் உங்களுடைய மொபைல் போனிலிருந்து எனது மொபைலுக்கு ஒரு கால் செய்ய முடியுமா எனக் கேட்டு பேச்சை தொடங்குகிறார். அதன் பிறகு உங்கள் நம்பர் வாங்க தான் இவ்வாறு செய்ததாகவும் உங்கள் எண்ணை நான் பதிந்து கொள்ளலாமா என்று விராட் கோலி கேட்கிறார்.விராட் கோலியின் இந்த சுட்டித்தனத்தை விரும்பும் தமன்னா அதற்கு ஓகேவும் சொல்லி விடுகிறார்.
இந்த வீடியோ தற்போது பத்து ஆண்டுகள் கழித்து வைரல் ஆகி வருகிறது. பலரும் இந்த வீடியோவை மேற்கோள் காட்டி தமன்னா வேறு தற்போது வேற லெவல் ஃபார்மில் இருப்பதால் அனுஷ்கா சர்மா விராட் கோலியை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். இந்த வீடியோவை தொடர்ந்து தமன்னாவும் விராட் கோலியும் இணைந்து எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் சுற்றி வருகிறது.


Click it and Unblock the Notifications