தோனிதான் இந்திய அணியின் நிரந்தர கேப்டன்..... பாசமழை பொழியும் பிசிசிஐ!
Recommended Video

டெல்லி:பல்வேறு விமர்சனங்கள், சர்ச்சைகள் இருந்தாலும் மகேந்திர சிங் தோனிதான் இந்திய அணியின் கேப்டன் என பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறியுள்ளது. இதை ரசித்தாலும், பிசிசிஐ இவ்வாறு சொதப்பியதை டுவிட்டரில் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
கிரிக்கெட்டில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுகிறார்.. தோனிக்கு வயசாயிடுத்து.... கிரேட் பினிஷனர் தோனி சொதப்புகிறார்.... இப்படி பல விமர்சனங்கள் வந்தாலும், தோனியை இன்னும் கேப்டனாகவே நினைக்கிறது பிசிசிஐ.
பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வீரர்கள் குறித்த தகவல்கள் பக்கத்தில் தோனியை, இந்திய அணியின் கேப்டன் என்று பிசிசிஐ கூறியுள்ளது.
2014ல் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, 2017ல் ஒருதினப் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். பிசிசிஐ இவ்வாறு குறிப்பிட்டுள்ளதை பலரும் ரசித்தாலும், சொதப்பிய பிசிசிஐயை டுவிட்டரில் கிண்டலடித்து வருகின்றனர். அதையடுத்து, தனது இணையதளத்தில் தோனி குறித்த பக்கத்தில் கேப்டன் என்ற வாசகத்தை பிசிசிஐ நீக்கியுள்ளது.
தோனியா செய்தார்
தோனி சொல்லித்தான் இதை செய்தோம் என்று சொல்லக் கூடாது. அல்லது அவருடைய ரசிகர்கள் இவ்வாறு செய்து விட்டார்கள் என்று சொல்லாதீர்கள் என்கிறார் இவர்.
நிரந்தர கேப்டன்
மற்றவர்கள் எல்லாம் தற்காலிகம்தான். கேப்டன் கூல் தோனிதான் இந்திய அணியின் நிரந்தர கேப்டன் என்கிறார் இவர்.
தோனிதான் பாஸ்
தோனி ஓய்வு பெறுகிறார் என்று சிலர் புரளி கிளப்பி விடுகின்றனர். ஆனால் தோனிதான் கேப்டன் என்று பிசிசிஐ நம்புகிறது. தோனிதான் பாஸ் என்கிறார் இந்த ரசிகர்.
பிசிசிஐயின் புதிய ஆசை
பிசிசிஐ தனது இணையதளத்தை அப்டேட் செய்ய மறந்து விட்டதா அல்லது தோனி மீண்டும் கேப்டனாக வேண்டும் என்ற தனது ஆசையை கூறுகிறதா என்று கேள்வி கேட்டுள்ளார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications