Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ரவி சாஸ்திரி பேச்சுக்கு ரசிகர்கள் கிண்டல்.. கவாஸ்கர் ஆறுதல்

Recommended Video

கோலி, ரவி சாஸ்திரி பேச்சுக்கு ரசிகர்கள் கிண்டல்..கவாஸ்கர் ஆறுதல்- வீடியோ

மும்பை : இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தோற்று கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதிலும், தோல்விக்கு பின் ரவி சாஸ்திரி இதுதான் சிறந்த இந்திய அணி என கூறியதை ஒருவராலும் ஏற்க முடியவில்லை.

அதை தொடர்ந்து ரவி சாஸ்திரியை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என குரல்கள் ஒலித்து வருகிறது. சிலர் கோலி கேப்டன் பதவிக்கு லாயக்கில்லை என கூறுவதையும் கேட்க முடிகிறது.

இந்த நிலையில், நேற்று செய்தியாளர் ஒருவரிடம் கோபப்பட்டுள்ளார் கோலி. செய்தியாளர்கள், ரசிகர்கள் என பல முனைகளில் இருந்தும் தாக்குதலை எதிர் கொண்டு வருகிறது இந்திய அணி.

சிறந்த அணி பேச்சு

சிறந்த அணி பேச்சு

ரவி சாஸ்திரி தொடர் தோல்விக்கு பின் இப்போதுள்ள இந்திய அணி தான் சிறந்த அணி என கூறினார். கடந்த 15-20 ஆண்டுகளில் இல்லாத அளவு இப்போதுள்ள அணி சிறப்பாக ஆடி வருகிறது என கூறினார். இந்திய அணி மோசமாக ஆடி தொடரை 1-3 என இழந்து இருந்த அந்த சமயத்தில் அவர் அப்படி பேசியது கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

கோபப்படும் கோலி

கோபப்படும் கோலி

அதே கேள்வியை நேற்று நிருபர் ஒருவர் கோலியிடம் கேட்டார். "நீங்கள் ரவி சாஸ்திரி சொல்வது போல இப்போதுள்ள இந்திய அணி தான் சிறந்த அணி என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? என கேட்டார். அதற்கு கோபமடைந்தார் கோலி.

தோல்விக்கு பின் இப்படி பேசலாமா?

தோல்விக்கு பின் இப்படி பேசலாமா?

இவர்கள் இது போல தோல்வி அடைந்துவிட்டு நாங்கள் தான் சிறந்த அணி என பேசி வருவது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இணையத்தளத்தில் இவர்களை ஓட்டு ஓட்டு என ஓட்டி வருகிறார்கள். சாம்பிளுக்கு இரண்டு இங்கே.

கிண்டல் செய்யும் ரசிகர்கள்

ரசிகர்கள் பலரும் ரவி சாஸ்திரியை மோசமாக கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த பதிவில் இந்தியா தொடரை இழந்த போது ரவி சாஸ்திரி தூங்கிக் கொண்டு இருந்தார். பின் விழித்த அவர் "நம் வீரர்கள் நன்றாக ஆடினார்கள். நாம் எளிதாக 4-1 என வென்று விடலாம்" என கூறிவிட்டு மீண்டும் தூங்கச் சென்று விட்டார் என கூறுகிறார்.

உச்சகட்டம்

மத்திய அரசு சில நாட்கள் முன்பு பெட்ரோல் விலை உயர்வு குறித்த ட்வீட்டில், முந்தைய ஆட்சியில் இருந்ததை விட குறைந்த சதவீதத்தில் தான் நாங்கள் விலை உயர்வு செய்து இருக்கிறோம் என ஒரு படத்தை போட்டிருந்தது. அதில் முந்தைய ஆட்சியில் விலை குறைவாக இருந்தும் பெரிய அளவில் காட்டப்பட்டு இருந்தது. அது போல, இந்திய கிரிக்கெட் அணி தொடரை இழந்தாலும் வென்றுவிட்டது என ஒரு படம் பகிரப்பட்டு வருகிறது.

கோலிக்கு கவாஸ்கர் ஆதரவு

கோலிக்கு கவாஸ்கர் ஆதரவு

நிருபர் கேட்ட கேள்விக்கு கோலி கோபப்பட்டது சரியா என்ற விவாதம் நடந்து வருகிறது. அதற்கு கவாஸ்கர் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர், "தோல்வி அடைந்த நேரத்தில் எந்த கேப்டனிடம் இப்படி கேட்டாலும் அவர் கோபப்பட தான் செய்வார்" என கூறியுள்ளார். கோலி கேப்டன் பதவிக்கு சரியானவர் தானா என கேள்வி எழுப்பிவரும் இதே கவாஸ்கர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, September 13, 2018, 11:43 [IST]
Other articles published on Sep 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+