Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.. பொறுக்க முடியாமல் அதை மாற்றிய வங்கதேச கிரிக்கெட் வாரியம்.. இப்போ ஹேப்பி

டாக்கா:இணையத்தில் நெட்டிசன்களின் வசவுகளுக்கு பின்னர் ஒரு வழியாக தமது அணியின் உலக கோப்பை ஜெர்சியை மாற்றி இருக்கிறது வங்கதேசம்.

ஒட்டுமொத்த கிரிக்கெட் அணிகளின் கனவு உலக கோப்பை தான். மே 30ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. அந்த கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பது அனைத்து அணிகளின் இலக்கு.

அதற்காக தீவிரமாக தயாராகி வருகிறது. ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் அணியும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தங்களது அணியை அறிவித்து வருகின்றன. அதன்படி உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சென்ற வாரம் அறிவித்தது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

கிரிக்கெட் உலக சாம்பியன் தீர்மானிக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என்பதால் அந்நாட்டு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். வங்கதேச அணியும் இம்முறை முக்கிய அணிகளை வீழ்த்தி பலத்துடன் உள்ளதால் உலக கோப்பையை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளது.

தனி ஜெர்சி

தனி ஜெர்சி

வீரர்களை அறிவித்த அதே நேரத்தில் உலக கோப்பைக்காக தனி ஜெர்சியை வடிவமைத்து வெளியிட்டது வங்கதேச கிரிக்கெட் வாரியம். ஆனால், அதனை ரசிகர்கள் சற்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

விமர்சனத்தால் நடவடிக்கை

விமர்சனத்தால் நடவடிக்கை

உலக கோப்பை தொடருக்கு செல்லும் முன்பாகவே ரசிகர்களின் இந்த விமர்சனத்தை வங்கதேச கிரிக்கெட் வாரியம் முக்கியமாக கவனத்தில் கொண்டது. உடனடியாக வேறொரு ஜெர்சியை விரைவில் மாற்றி வடிவமைத்து வெளியிடுவோம் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

ரசிகர்கள் வரவேற்பு

அதேபோலவே, தற்போது புதிய ஜெர்சியை வெளியிட்டது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இதனை மிர்பூரில் உள்ள மைதானத்தில் அனைவரின் முன்னிலையில் வீரர்கள் அணிந்து பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்தனர். இதற்க்கு ரசிகர்கள் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, May 1, 2019, 12:13 [IST]
Other articles published on May 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+