தோனி… தோனி… பாகுபலி ஸ்டைலில் ரசிகர்கள் மாஸ்… இணையத்தில் வைரல் வீடியோ
Recommended Video

டெல்லி: நான்காவது ஒருநாள் போட்டியின்போது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஸ்டெம்பிங் வாய்ப்பைத் தவறவிட்டபோது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி... தோனி... என பாகுபலி ஸ்டைலில் ஆர்ப்பரித்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியை இந்தியா, இனி அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அந்த தோல்வி குறித்து பல முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
போட்டியில், இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங்கும், பந்து வீச்சுமே காரணம் என்று ரசிகர்கள் கருத்து கூறுகின்றனர். உலக கோப்பை அணி தேர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
டுவிட்டர் பதிவு
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மோசமான ஆட்டம்
பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் இந்திய அணி மிகமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்த போட்டியில்தான். கையில் விழுந்த கேட்ச்சுகளை தவறவிட்டனர்.

தோனியின் அருமை
அதேபோல், இதுபோன்ற சூழ்நிலைகளில்தான் இந்தியா தோனியின் அருமையை உணருகிறது. ஆஸ்திரேலியாவின் டார்னர் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று பதிவிட்டுள்ளார்.
வைரலான வீடியோ
மேலும், மொகாலி போட்டியின்போது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஸ்டெம்பிங் வாய்ப்பை தவறவிட்டது மிக கொடுமை. அப்போது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி... தோனி... என பாகுபலி ஸ்டைலில் ஆர்ப்பரித்தனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications