Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹெட்டிங்லி டெஸ்ட்-ல் பிரபலமான தினேஷ் கார்த்தி..

இங்கிலாந்து: ஹெட்டிங்லி டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்காக ரசிகர்கள் செய்த காரியம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டை பெற்று வந்தவர் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இன்றுவரை இவருக்கு அணியில் இடம் கிடைக்காமல் உள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

உலகக்கோப்பை தொடரில் முழுவதுமாக திணறி வந்த காரணத்தினால் அதற்குப் பின்னர் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டி அணிகளில் அவருக்கான வாய்ப்பு குறைந்தது. தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார். ஆனால் கொல்கத்தா அணியுலும் அவருக்கான வாய்ப்புகள் சற்று குறைவாகவே உள்ளது.

கமெண்ட்டேட்டர்

கமெண்ட்டேட்டர்

கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வர்ணனையாளர் அவதாரம் எடுத்து அசத்தினார் தினேஷ் கார்த்திக். அவரின் தெளிவான விளக்கம் மற்றும் நகைச்சுவை பேச்சு ரசிகர்களை ஈர்த்தது. இதனையடுத்து இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடருக்கும், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் முதல் 2 போட்டிகளிலும் அவர் பங்கேற்றிருந்தார்.

அமீரகம் சென்ற தினேஷ்கார்த்திக்

அமீரகம் சென்ற தினேஷ்கார்த்திக்

இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடருக்காக வர்ணனையாளர் பணியை நிறுத்திவிட்டு அமீரகம் புறப்பட்டுள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2வது பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தினேஷ் கார்த்திக் விளையாடி வருகிறார். எனவே அதற்கு தயார் ஆவதற்காக வர்ணனையாளர் பணிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு அமீரகம் புறப்பட்டுவிட்டார்.

வைரல் புகைப்படம்

வைரல் புகைப்படம்

இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் அவருக்காக ரசிகர்கள் பாச மழைப் பொழிந்துள்ளனர். ஹெட்டிங்லியில் நடைபெற்ற இன்றைய போட்டியின் போது, ரசிகர்கள் சிலர், தினேஷ் கார்த்திக், உங்களின் வர்ணனையும், புள்ளிவிவரங்களையும் நாங்கள் மிஸ் செய்கிறோம், எங்கு சென்றீர்கள் என்று எழுதப்பட்டிருந்த பதாகத்தை ஏந்தி நின்றிருந்தனர். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Story first published: Friday, August 27, 2021, 21:49 [IST]
Other articles published on Aug 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+