Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அப்படியே நம்ம கிராமத்தாளா நிக்கறாப்படி” - ”கேப்டன் கூல்” டோணியின் பர்த்டே ஸ்பெஷல் போட்டோ!

டெல்லி: உலகிலேயே எக்கச்சக்கமாக சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களில் முதலிடத்தில் உள்ள "கேப்டன் கூல்" டோணிக்கு இன்று 34 வது பிறந்தநாள். இந்தப் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் டுவிட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அவரது அரிய புகைப்படம் ஒன்றும் ரசிகர்களிடம் உலா வருகின்றது.

1981 ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த டோணியின் பிறந்தநாளான இன்று, டோணியின் மகளான ஜிவா பிறந்தபின்னர் தந்தையுடனான முதலாவது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது திருமண நாள்:

ஐந்தாவது திருமண நாள்:

கடந்த சனிக்கிழமையன்றுதான் தனது 5வது திருமண நாளை மனைவி சாக்‌ஷி மற்றும் நண்பர்கள், உறவினர்கள் சூழ கொண்டாடியிருந்தார் கேப்டன் டோணி. இந்நிலையில் இன்று சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துமழையில் நனைந்துகொண்டிருக்கிறார் பர்த்டே பாய் டோணி.

சூப்பர் புகைப்படம்:

இந்நிலையில் டோணியின் கருப்பு, வெள்ளை புகைப்படம் ஒன்றினை ரசிகர்கள் அதிகமாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அந்த கருப்புவெள்ளை அபூர்வ ஸ்டில்லின் சிகைலங்காரம், மீசை,புருவம் எக்ஸட்ராக்களை வடிவமைத்துள்ளார் டோணியின் நெடுங்கால ஹேர்ஸ்டைலிஷ்டான ஷப்னா பவனானி.

வைரலாகும் போட்டோ:

வைரலாகும் போட்டோ:

டோணியின் பிறந்தநாள் பரிசாக இதை ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த ஸ்டில் இணையங்களில் வைரலாகப் பரவத்துவங்கியுள்ளது.

குவியும் வாழ்த்துக்கள்:

குவியும் வாழ்த்துக்கள்:

அச்சு அசல் கிராமத்துக்காரராகவே தோற்றமளிக்கிறார் இப்புகைப்படத்தில் டோணி. அதனால், எல்லா தரப்பு ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது அப்புகைப்படம். பிறந்த நாள் பரிசாக வெளியாகியுள்ள இப்புகைப்படத்திற்கு பாராட்டுகளும் கூடவே வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றனவாம்!

Story first published: Tuesday, July 7, 2015, 13:23 [IST]
Other articles published on Jul 7, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+