For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"ஸ்விட்ச் பவுலிங்".. 360 டிகிரியில் சுழன்று .. நிரூபித்துக் காட்டிய இந்திய வீரர் - செம!

மும்பை: ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் என்று பவுலிங்கில் உள்ள வெவ்வேறு வெரைட்டிகள் குறித்து பார்த்திருப்போம். ஆனால், 'ஸ்விட்ச் பவுலிங்' குறித்து கேள்விப்பட்டு இருக்கீங்களா?

எந்தவொரு விஷயமும் கொஞ்சமாக கிடைக்கும் போது, அதற்கான மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருக்கும். அதுவே ஓவர் டோஸ் ஆனால் சலித்துவிடும். கபில் தேவ் காலத்தில் இருந்து படிப்படியான பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று உச்சத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட்டும் அப்படித்தான்.

வருடத்தின் அனைத்து மாதங்களிலும் சர்வதேச கிரிக்கெட் தொடர், ஐபிஎல்... என்று சலிக்க சலிக்க கிரிக்கெட் அள்ளித் தெளிக்கப்படுகிறது. அதில் எதை பருகுவது, எதை விடுவது என்பதிலேயே மண்டை காய்ந்துவிடுகிறது. அதற்கேற்றாற் போல, கிரிக்கெட் 'கமர்ஷியல்' அயிட்டங்களால் நிரம்பி வழிகிறது. ஒரு தொடரின் தேதி அறிவிப்பில் இருந்து, Presentation Party முடியும் வரை கமர்ஷியல் இல்லாத இடமே இல்லை.

 கமர்ஷியல் கிரிக்கெட்

கமர்ஷியல் கிரிக்கெட்

இது படிப்பபடியாக வீரர்களின் கிரிக்கெட் ஆட்டத்திலும் நுழைந்துவிட்டது. சச்சின் போன்ற வீரர்களை 'Class Batsman' என்கிறோம். ஆனால், இன்று எத்தனை வீரர்கள், சரியான கிரிக்கெட் ஷாட்ஸ் கொண்டு பேட்டிங் செய்கிறார்கள். ஒவ்வொருவரின் பேட்டிங் ஸ்டைல் மாறுபடலாம். ஆனால், கிரிக்கெட்டுக்கு என்று வகுக்கப்பட்ட இலக்கணத்தின் படி இன்று பெரும்பாலான ஷாட்ஸ்கள் பறப்பதில்லை. 'மிஸ்டர். 360 டிகிரி' டி வில்லியர்ஸ் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். நீட் ஷாட்ஸ் விளையாடவும் தெரியும். படுத்துக் கொண்டு சிக்ஸ் அடித்து, கிரிக்கெட் புத்தகத்தில் புதிய இலக்கணங்களை எழுதவும் தெரியும்.

 புதிய வித்தை

புதிய வித்தை

ரசிகர்கள் அதைத்தானே விரும்புகிறார்கள். டி வில்லியர்ஸ், ரஸல், கெயில், மேக்ஸ்வேல் போன்றவர்களைத் தான் ரசிகர்கள் விரும்புவார்கள். சரி பேட்டிங்கில் தான் இப்படித்தான் என்றால், பவுலிங்கில் இங்கு ஓருவர் புதிய வித்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார். பெயர் ஸ்விட்ச் பவுலிங்காம். இந்திய வீரர் ஷிவா சிங் என்பவர், பந்து வீச ஓடி வரும் போது, உடலை ஒரு சுற்று சுற்றி பந்தை வீசுகிறார்.

 360 டிகிரி சுழன்று

360 டிகிரி சுழன்று

உள்ளூர் போட்டி ஒன்றில் இப்படி அவர் பந்து பந்துவீசியதை கண்டு அம்பயரே அதிர்ச்சி ஆகிவிட்டார். உடனடியாக, அந்த பந்து நோ-பால் என்றும் அறிவித்துவிட்டார். காரணம், ஐசிசி விதிகளின் படி, பேட்ஸ்மேனை திசைத்திருப்பும் எந்தவொரு பவுலிங்கிற்கும் நோ-பால் கொடுக்கப்படும். அதன்படி, இந்த 360 டிகிரி பந்துவீச்சுக்கும் நோ-பால் கொடுக்கப்பட்டுள்ளது.

 கான்செப்ட் புதிது

கான்செப்ட் புதிது

எனினும், இதுபோன்று 360 டிகிரி சுழன்று பந்துவீசுவது தான் எப்போதும் இவரது பாணி என்றிருந்தால், ஐசிசி இதற்கு அனுமதியளிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அவர் திடீரென ஒரு குறிப்பிட்ட பந்தை மட்டும் அப்படி வீசியதை கிரிக்கெட் விதிகள் ஏற்காது. அதேசமயம், ஸ்விட்ச் ஹிட்டிங் பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். டி வில்லியர்ஸ், வார்னர், கெவின் பீட்டர்சன் ஆகியோர் அதிகம் ஸ்விட்ச் ஹிட்டிங்கில் ஈடுபடும் பேட்ஸ்மேன்கள். இடது கை பேட்ஸ்மேனான வார்னர், பவுலர் பந்து வீசும் போது, ஒரு நொடியில் வலது பக்கம் திரும்பி பந்தை விளாசுவது ஸ்விட்ச் ஹிட்டிங் எனப்படும். ஆனால், ஸ்விட்ச் பவுலிங் கான்செப்ட் புதிது!

Story first published: Friday, May 21, 2021, 17:03 [IST]
Other articles published on May 21, 2021
English summary
fans wonder switch bowling by indian spinner - கிரிக்கெட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+