ஆஸி.க்கு எதிரான முக்கிய மேட்ச்.. பட்லரின் அந்த செயல்... கடுப்பில் இங்கிலாந்து ரசிகர்கள்
Recommended Video
லார்ட்ஸ்: ஆஸி.க்கு எதிரான முக்கிய போட்டியில், விக்கெட் கீப்பிங்கில் பட்லர் சொதப்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமும் எதிர்பார்த்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டனான இயான் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே களம் இறங்கியுள்ளனர். அதே வேளையில் ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஆடம் ஜாம்பா மற்றும் கூல்டர் நைல் நீக்கப் பட்டு அவர்களுக்கு பதிலாக நாதன் லயன் மற்றும் ஜேசன் பெஹண்ட்ரூப் இடம் பிடித்துள்ளனர்.

வெளுத்த ஆஸி.
தொடக்க வீரர்களாக பின்சும், வார்னரும் களம் இறங்கினர். ஏற்கனவே சொல்லி வைத்தார் போல் இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்தனர். அவர்களை கட்டுப் படுத்த இங்கிலாந்து பவுலர்கள் ரொம்ப மெனக்கெட்டனர். ஆனால் அவ்வளவு எளிதாக அவர்களது எதிர்பார்ப்பு நடக்கவில்லை.

100 ரன்களை கடந்தது
இருவரும் முதல் விக்கெட்டுக்கு அருமையாக கைகோர்த்து ஆடினர். ஒரு கட்டத்தில் அணியின் ஸ்கோர் 100ஐ தாண்டியது. ஸ்கோர் 123 ஆக இருந்த போது தான் இங்கிலாந்துக்கு பலன் கிடைத்தது. 53 ரன்கள் எடுத்து அருமையாக ஆடிக் கொண்டிருந்த வார்னர், மொயின் அலி பந்தில் வெளியேறினார்.

சதம் அடித்தார் பின்ச்
வார்னருக்கு பிறகு கவாஜா களம் இறங்கினர். ஆனாலும் ரன் ரேட் குறைய வில்லை. மறுபக்கம் நின்ற பின்ச் சதத்தை நெருங்கினார். இந்த போட்டியில் பந்துவீச்சை போன்றே, பட்லரின் கீப்பிங் கொஞ்சம் கவலை கொள்ளும் விதமாக இருக்கிறது.

வாய்ப்பு மிஸ்சானது
கவாஜாவை ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பை அவர் மிஸ் செய்தார். அதற்கு முன் இன்னொரு செய்த தவறை தான் ரசிகர்கள் பொருமி தள்ளினர். வோக்ஸ் வீசிய ஒரு பந்து, வார்னர் பேட்டில் பட்டு அவரது கிளவுசில் புகுந்தது.

அவுட் இல்லை
வோக்ஸ் பலம் கொண்ட மட்டும் நடுவரிடம் அப்பீலுக்கு போகிறார். ஆனால், பட்லரோ எதுவுமே நடைபெறாதது போல... அவுட் இல்லை என்பது போல இருந்தார். கேப்டன் மோர்கன் ரிவ்யூவு கேட்டபோதும் பந்து, பேட்டில் படவில்லை என்று சொல்லிவிட்டார்.

விக்கெட் போனது
ஆனால், அதன்பிறகு ரீ பிளே காட்டப்பட்டது. அதில், பந்து அழகாக பேட்டில் பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது. அப்போதே அந்த விக்கெட் கைக்கு கிடைத்திருந்தால், ரன் ரேட் குறைந்து, வேறு ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். ஆனால், அதற்கு வழி இல்லாமல் போய்விட்டது.


Click it and Unblock the Notifications