இப்படியாப்பா சேஸ் செய்வது.. நல்ல வேளையாப் போச்சு!
ஆக்லாந்து: ஜிம்பாப்வே உடனான இந்தியாவின் சேஸிங்கைப் பார்த்து ரசிகர்கள் திகிலடித்துப் போயுள்ளனர்.
பவுலிங்கில் முதலில் சொதப்பிய இந்தியா இப்போது அதை விட சேஸிங்கில் பெரிய அளவில் தடுமாறிக் கொண்டுள்ளது.
288 என்ற வெற்றி இலக்கை துரத்திக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு அடுத்தடுத்து முக்கிய தலைகள் விழுந்தது அதிர்ச்சியாக அமைந்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் சொற்ப ரன்களில் இடத்தைக் காலி செய்தனர்.
விராத் கோஹ்லியும் ஏமாற்றினார். ரஹானே ரன் அவுட் மற்றொரு அதிர்ச்சி.

தற்போது கேப்டன் டோணி களம் இறங்கியுள்ளார். அவரது கையில்தான் தற்போது இந்தியாவின் வெற்றி அடங்கியுள்ளது. அவருடன் சுரேஷ் ரெய்னா நம்பிக்கையூட்டும் வகையில் ஆடி வருகிறார். இருவரும் சேர்ந்துதான் இந்தியாவைக் கரையேற்ற வேண்டும்.
இந்த நிலையில் பேஸ்புக் உள்ளிட்டவற்றில் ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். டோணி அதிரடியாக ஆட வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி போஸ்ட் போட ஆரம்பித்துள்ளனர்.
பார்க்கலாம்.. இந்தியாவின் சேசிங் வெற்றிகரமாக முடியுமா, இல்லையா என்பதை.


Click it and Unblock the Notifications