Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சான்ஸே இல்லை.. அறிமுகப் போட்டியில் அசத்திய திலக் வர்மா.. ஜடேஜா ஸ்டைலில் உருண்டு பிடித்த கேட்ச்!

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான்சன் சார்லஸ் கொடுத்த கேட்சை இந்திய அணியின் திலக் வர்மா ஜடேஜா ஸ்டைலில் பிடித்து அசத்தியுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்திய அணியிடம் மோசமான தோல்வியடைந்த அடைந்த வெஸ்ட் இண்டீஸ், டி20 தொடரிலாவது சவால் அளிக்குமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இதில் இந்திய அணி சார்பாக அதிரடி வீரர் திலக் வர்மா மற்றும் முகேஷ் குமார் இருவரும் அறிமுகம் செய்யப்பட்டனர்.

Fantastic Catch by Tilak Varma like Jadeja in the Debut Match against WI Batsmet Johnson Charles

முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. 4 ஓவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய ஹர்திக் பாண்டியா 5வது ஓவரில் சாஹலை அட்டாக்கில் கொண்டு வந்தார். அவர் வீசிய 5வது ஓவரில் பிரண்டன் கிங் 28 ரன்களும்ஜ், கைல் மேயர்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து வந்த ஜான்சன் சார்லஸ் குல்தீப் யாதவை அட்டாக் செய்ய நினைத்தார்.

இதனையடுத்து குல்தீப் யாதவ் வீசிய 7.3 பந்தில் சிக்சர் அடிக்க முயன்று பேட்டை சுழற்றினார். ஆனால் பேட்டில் சரியாக படாததால், டீப் மிட் விக்கெட் திசை பக்கம் பறந்தது. அங்கு ஃபீல்டிங் செய்த திலக் வர்மா அந்த கேட்சை அபாரமாக பிடித்து மிரட்டினார். அந்த கேட்சை எடுக்க ஓடி வந்து சரியாக இடத்தில் டைவ் அடித்து கேட்சை பிடித்தார். அதன்பின் உடலை கட்டுப்படுத்த தரையில் மூன்று முறை உருண்ட கேட்சை சரியாக பிடித்து மிரட்டினார்.

இந்த கேட்சை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜடேஜா ஸ்டைலில் திலக் வர்மா கேட்ச் பிடித்து அசத்தியுள்ளதாக பாராட்டி வருகின்றனர். சிஎஸ்கே அணிக்காக இதுபோல் ஏராளமான கேட்ச்களை ஜடேஜா பிடித்துள்ளார். அதேபோல் அறிமுக போட்டியிலேயே திலக் வர்மா இதுபோன்ற கேட்சை எடுத்துள்ளது ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அறிமுக போட்டியிலேயே திலக் வர்மா அசத்தலான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தி வருவதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடிய திலக் வர்மா, 3வது இடத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 3, 2023, 21:36 [IST]
Other articles published on Aug 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+