பர்மிங்ஹாம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இதனை வைத்து இந்திய ரசிகர்கள் உருவாக்கிய அசத்தலான மீம்ஸை பார்க்கலாம்.
ஒவ்வொரு முறையும் ஆஸி. அணியின் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கும் போதும் இங்கிலாந்து அணியின் பார்மி ஆர்மி ரசிகர்கள் "we saw you crying on the television" என்ற பாடலை பாட தொடங்கினர். சில நேரங்களில் பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்த போது இது தொடர்ந்தது. இதனை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடிகர் சந்தானம், "ஏன் சார்.. என்ன மட்டும் அப்படி கலாய்க்கிறீங்க.. என்ன பார்த்தா பாவமாக இல்லையா சார்" என்று நக்கலாக கேட்பார். அதனை அப்படியே ஸ்டீவ் ஸ்மித் இங்கிலாந்து ரசிகர்களை பார்த்து வெற்றிக்கு பின் கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி. அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, போட்டி நடந்த 5 நாட்களிலும் ஏதேனும் ஒரு பகுதியில் பேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார். சிறப்பாக ஆடிய அவர் முதல் இன்னிங்ஸில் சதமும், 2வது இன்னிங்ஸில் அரைசதமும் விளாசினார். இதனை கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் ஜான் ஸ்னோ கதாபாத்திரம் போரை சந்திக்க தனியாளாக நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு, மாவீரன் போல் கவாஜாவை உருவகப்படுத்தி உருவாக்கியுள்ள மீம் மரண மாஸ்.

நேற்றைய ஆட்டத்தில் 9வது விக்கெட்டுக்கு நின்று கம்மின்ஸ் - லயன் கூட்டணி வெற்றியை உறுதி செய்தது. கிட்டத்தட்ட 2019ஆம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரில் பென் ஸ்டோக்ஸ் - லீச் ஜோடி என்ன செய்ததோ, அதனை அப்படியே மாற்றி ஆஸி. பதிலடி கொடுத்துள்ளது. இதனை ரசிகர்கள் " இதேபோல் எங்கோ பார்த்திருக்கிறேன்.. எங்கேயோ பார்த்திருக்கிறேன்.. இட்ஸ் அ கிளாசிக்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முதல் நாளில் 8 விக்கெட்டுகள் இருக்கையில் டிக்ளேர் செய்ததே காரணமாக அமைந்தது. விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்து அணி அமைத்த வியூகத்தை ஆஸி. வீரர்கள் அசால்ட்டாக உடைத்தனர். இதனை போக்கிரி படத்தில் நடிகர் விஜய், "என்னைய என்ன உன் ஏரியா போலீஸ் ஸ்டேஷந்க்கு வந்த கான்ஸ்டபிள்னு நினைச்சியா" என்று பேசுவார். அதனை மாற்றி, இங்கிலாந்து அணியை பார்த்து ஆஸி. அணி, "நீ டிக்ளேர் பண்ண உடனே சீக்கிரம் ஆல் அவுட்டாக என்னைய என்ன இந்தியானு நினைச்சியா" என்று போகிறபோக்கில் இந்திய அணியை கலாய்த்து உருவாக்கிய மீம் வெறித்தனம்.

227 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கம்மின்ஸ் - லயன் கூட்டணி 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தது. இதன்பின்னர் ஆஸ்திரேலிய அணியின் ஓய்வறையிலேயே தீவிரமாக கொண்டாடினர். அதனை மாற்றி, சார்பட்டா பரம்பரை ரங்கன் வாத்தியார் கத்தி கொண்டாடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறி ரகம்.
