Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"நீங்க பெரிய சோக்கர்ஸ்.. நான் சின்ன சோக்கர்ஸ்” தென்னாப்பிரிக்காவை வெளுக்கும் வெறித்தன மீம்ஸ்!

கொல்கத்தா: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Fantastic memes from Social Media after Australia won by 3 wickets againt south africa in the Semi finals of icc 50 over world cup

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சோக்கர்ஸ் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனை நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி, நீ பெரிய டான் சார்.. நான் குட்டி டான் என்று சொல்லுவார். அதுபோல் இந்திய அணி, கடைசி 9 ஐசிசி தொடர்களில் சோக்கிங் பண்ணிருக்கோம் என்று சொல்ல, அதற்கு தென்னாப்பிரிக்கா, அப்போ நாங்க என்று கேள்வி எழுப்புவதாகவும், இதற்கு விஜய் சேதுபதி, நீங்க பெரிய சோக்கர்.. நான் சின்ன சோக்கர் என்று கூறுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

Fantastic memes from Social Media after Australia won by 3 wickets againt south africa in the Semi finals of icc 50 over world cup

உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ளன. இதனை தெறி படத்தில் வில்லன் மகேந்திரன் ஹீரோவான விஜய்-க்கு போன் செய்து, உனக்கு ஒரு குட் நியூஸ்.. உன்னை கொல்ல நான் அங்க வந்துட்டே இருக்கேன் என்று கூறுவார். அதனை மாற்றி, பைனல்ஸ்ல உன்னை போட வந்துட்டே இருக்கோம் என்று இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா போனில் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல் ரகம்.

Fantastic memes from Social Media after Australia won by 3 wickets againt south africa in the Semi finals of icc 50 over world cup

நேற்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா டக் அவுட்டாகி வெளியேறினார். ஒரு காலத்தில் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி இப்படிதான் டக் அவுட்டாகி வெளியேறுவார். இதனை ஒப்பிட்டு, பாகுபலி முதல் பாகத்தில் நாசர், என் மகன் என்று ராணாவை கொண்டாடுவார். அதில் நாசரின் முகத்திற்கு பதிலாக அப்ரிடி முகத்தை வைத்து, எனது மாணவன்.. எனது மாணவன் என்று கூறுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் உச்சக்கட்ட காமெடி ரகம்.

Fantastic memes from Social Media after Australia won by 3 wickets againt south africa in the Semi finals of icc 50 over world cup

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் இந்திய அணி 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அதனை பார்க்கவே கால்பந்து கோல் ஸ்கோரை போல் இருந்தது. இந்த புகைப்படத்தை பதிவிட்டு, நண்பன் படத்தின் கிளைமாக்ஸில் விஜய், நடிகர் சத்யனுக்கு அழைத்து, "ஹாய் மிஸ்டர் வட்சன்" என்று கூறுவார். அதனை மாற்றி, ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு போனில் அழைத்து, "ஹாய்" சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

Fantastic memes from Social Media after Australia won by 3 wickets againt south africa in the Semi finals of icc 50 over world cup

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனால் அரையிறுதியில் மிரட்டலாக ஆடி வென்றுள்ளது. இதனை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில், அவன் லேசு பட்டவனு நினைக்காதீங்க மேடம் என்று ஒருவர் சொல்வார். அதனை ஆஸ்திரேலியா அணியை பார்த்து தென்னாப்பிரிக்கா அணியினர் இந்திய அணியை எச்சரிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல் மாஸ். அதிலும், மனிதருக்கு பதிலாக கங்காரு முகத்தை மாற்றியது தான் ஹைலைட்.

Story first published: Friday, November 17, 2023, 10:33 [IST]
Other articles published on Nov 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+