Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோபம் வந்த சிட்டியாக வெ.இ அணி.. எப்படியெல்லாம் அடி வாங்குறாங்க.. ஹர்திக் பாண்டியாவை பொளக்கும் மீம்ஸ்

குயானா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

Fantastic Memes from Social Media after India lost against West Indies by 2 Wickets in the 2nd T20 Match

நேற்றைய ஆட்டத்தில் சாஹல் வீசிய 16வது ஓவரில் ஒரு ரன் அவுட் உட்பட 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து மீண்டும் 18வது ஓவரில் சாஹட் அட்டாக்கில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அவரை 20வது ஓவரை வீச வைக்க ஹர்திக் பாண்டியா நிறுத்தி வைத்திருந்தார். ஆனால் இன்னொரு பக்கம் அக்சர் படேலுக்கு ஒரு ஓவர் கூட வழங்கவில்லை. இதனை வடிவேலு காமெடியில் வருவதை அப்படியே மாற்றி ஹர்திக் பாண்டியாவை பார்த்து ரசிகர்கள், "மண்ட கோளாறு உள்ளவன்.. லூசு பய" என்று ரசிகர்கள் விமர்சிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

Fantastic Memes from Social Media after India lost against West Indies by 2 Wickets in the 2nd T20 Match

இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அடிக்கடி, Good to be unique என்று சொல்லுவார். அதேபோல் நேற்றைய ஆட்டத்தில் வித்தியாசமான 16வது ஓவரை சிறப்பாக வீசிய சாஹலை அட்டாக்கில் இருந்து மாற்றினார். இதனை ஹர்திக் பாண்டியாவின் வார்த்தைகளை வைத்தே கிண்டல் செய்து உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Fantastic Memes from Social Media after India lost against West Indies by 2 Wickets in the 2nd T20 Match

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இளம் வீரர் திலக் வர்மா 39 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன் மூலம் 20 வயதில் இந்திய டி20 அணியில் அரைசதம் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையையும் திலக் வர்மா பெற்றுள்ளார். இதற்கு முன் ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்திருந்தார். இவர்களின் புகைப்படங்களை ஒன்றாக இணைத்து, 20 வயதில் இந்திய டி20 அணிக்காக அரைசதம் அடித்த இரு இந்திய வீரர்களை பார்க்கிறீர்கள் என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் கூல்பம்ப்.

Fantastic Memes from Social Media after India lost against West Indies by 2 Wickets in the 2nd T20 Match

2016ஆம் ஆண்டுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்முறையாக இந்திய அணியை தொடர்ச்சியாக 2 டி20 போட்டிகளில் வீழ்த்தியுள்ளது. கடைசியாக பவுண்டரி அடித்துவிட்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் ஹொசைன் தனது காதுகளை மூடி கொண்டாடினார். இதனை எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவை பார்த்து ஐஸ்வர்யா ராய், "வசீ.. சிட்டிக்கு கோபம் வருது" என்று சொல்லுவார். அதனை அப்படியே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பொறுத்தி "கோபம் வருது" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறி ரகம்.

Fantastic Memes from Social Media after India lost against West Indies by 2 Wickets in the 2nd T20 Match

அதேபோல் முதல் போட்டியில் டாஸ் தோல்வியடைந்து இந்திய அணி சேஸிங் செய்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற முதல் பேட்டிங் செய்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனை சந்திரமுகி படத்தில் வரும் வடிவேலு, "சேத்திலயும் அடி வாங்கியாச்சு.. சோத்துலயும் அடி வாங்கியாச்சு" என்று சொல்லுவார். அதில் வரும் வடிவேலுவை இந்திய அணியாக மாற்றி சேஸிங்கிலும் தோல்வி, பேட்டிங்கிலும் தோல்வி என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மெர்சல் ரகம்.

Story first published: Monday, August 7, 2023, 9:06 [IST]
Other articles published on Aug 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+