Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”நீ ஜேம்ஸ் பாண்ட் தான்.. ஜேம்ஸ் பாண்ட் தான்.. ஒத்துக்கிறோம்” சிக்கிய ஹர்திக்.. வெளுக்கும் மீம்ஸ்!

ஃபுளோரிடா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்த நிலையில், கடைசி போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Fantastic memes from Social media after india lost the t20 series against west indies

இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஒன்றிரண்டு தொடர்களில் தோல்வியடைவது பற்றி கவலையில்லை என்று கூறினார். அப்போது கண்ணாடி அணிந்து கொண்டு ஹர்திக் பாண்டியா பேட்டி அளித்தார். இதனை பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்வா கண்ணாடி அணிருந்திக்கும் போது சந்தானம், "கண்ணாடிய கழட்டுடா" என்பார். அதனை ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் கலக்கல்.

Fantastic memes from Social media after india lost the t20 series against west indies

அதேபோல் 4வது டி20 போட்டியில் சுப்மன் கில் - யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் மட்டும் 165 ரன்களாக இருந்தது. ஆனால் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி மொத்தமாகவே 165 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனை கிண்டல் செய்யும் வகையில் கண் தெரியாமல் கவுண்டமணி, "சூப்பரப்பு" என்று சொல்லும் புகைப்படத்துடன் உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Fantastic memes from Social media after india lost the t20 series against west indies

இந்திய அணியின் ஃபினிஷர் ரோலில் ஆடி வரும் ஹர்திக் பாண்டியா நேற்றைய ஆட்டத்தில் 18 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் மிரண்டு போயினர். இதனை விக்ரம் படத்தில் துப்பாக்கியுடன் நிற்கும் சக போலீஸ்காரரை பார்த்து செம்பன் வினோத், "நீ ஜேம்ஸ் பாண்ட் தான்.. ஜேம்ஸ் பாண்ட் தான்ன்" என்று கூறுவதை போல் ஹர்திக்கை ரசிகர்கள் கிண்டல் செய்து உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல்.

Fantastic memes from Social media after india lost the t20 series against west indies

நேற்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் சஞ்சு சாம்சனின் டி20 கிரிக்கெட் பேட்டிங் சராசரி 18.50 ஆக குறைந்துள்ளது. இதனை சார்பட்ட பரம்பரை ரங்கம் வாத்தியராக பசுபதி, "சஞ்சு அடிக்கிற சிக்ஸ் ஒவ்வொன்னும் க்ளீனா இருக்கும்.. ஆனா நிதானமும், கன்சிஸ்டன்சி-யும் இல்ல" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் செண்டிமெண்டல் டச்.

Fantastic memes from Social media after india lost the t20 series against west indies

நேற்றைய ஆட்டத்தில் திடீரென பந்துவீசிய திலக் வர்மா அதிரடியாக ஆடிய பூரனை வீழ்த்தி அசத்தினார். இதனை வின்னர் படத்தில் வரும் பிரசாந்தை பார்த்து வடிவேலு, "அடேங்கப்பா.. எக்கச்சக்க வித்தையை கையில் வச்சுருக்கியேப்பா" என்று சொல்லுவார். அதனை மாற்றி, "அடேங்கப்பா.. விக்கெட்லாம் எடுக்குறியே" என்று திலக் வர்மாவை பாராட்டி உருவாக்கப்பட்ட மீம் ரியல் ஃபன்.

Story first published: Monday, August 14, 2023, 10:18 [IST]
Other articles published on Aug 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+