For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs PAK: ”எப்பவாச்சு மழைனா ஓகே.. எப்பவுமே மழைனா எப்படி” ரசிகர்களின் வெறித்தன மீம்ஸ்!

கொழும்பு: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி மழைய் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், நேற்றைய ஆட்டத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Fantastic Memes from Social Media after India Pakistan Match postponed to Reserve day due to Heavy Rain

நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் பவுலர் நசீம் ஷா வீசிய 7.3 ஓவரில் சுப்மன் கில் அடித்த பந்து எட்ஜாகி ஸ்லிப் திசையை நோக்கி சென்றது. ஸ்லிப் திசையில் பாகிஸ்தான் அணியின் இரு வீரர்கள் கேச் பிடிக்காமல் பந்து கடந்து செல்வதை வேடிக்கை பார்த்தனர். விக்கெட் கீப்பர் எங்கிருந்தோ கேட்ச் பிடிக்க முயன்றும், ஸ்லிப் ஃபீல்டர்கள் எந்த அசைவையும் வெளிப்படுத்தவில்லை. இதனை வைத்து அண்ணாமலை படத்தில் மனோரமா சொல்லும், "என் அண்ணாமலை இன்னும் மாறலை" என்ற வசனத்தை பாகிஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

Fantastic Memes from Social Media after India Pakistan Match postponed to Reserve day due to Heavy Rain

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் போடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுன்சர் பந்துகளை வீசச் சொல்லி பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயருக்கு கடைசி நேரத்தில் முதுகு பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு பதில் கேஎல் ராகுல் களமிறங்குவதாக தெரிவித்தார். இதனை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் நின்று பார்க்கும் மீம் டெம்ப்ளேட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் பார்ப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்றா சக்க ரகம்.

Fantastic Memes from Social Media after India Pakistan Match postponed to Reserve day due to Heavy Rain

பாகிஸ்தான் அணியின் ஷடாப் கான் வீசிய முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி உட்பட 19 ரன்களை விளாசினார். இதனை ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், நான் டைனோசர் தான் பேசுறேன் என்று நடிகர் சரவணனிடம் சொல்லுவார். அதனை பாகிஸ்தான் அணியை பார்த்து ரோகித் சர்மா சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் ரகம்.

Fantastic Memes from Social Media after India Pakistan Match postponed to Reserve day due to Heavy Rain

இந்திய அணி 24.1 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து விளையாடிய போது திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதன்பின் ஆட்டம் தொடங்கவே இல்லை. அதேபோல் செப்.2ஆம் தேதி நடைபெற்ற போட்டியிலும் இந்திய அணி பேட்டிங்கிற்கு பின் மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டது. இப்படி இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி பந்துவீசியுள்ளது. இதனை கிண்டல் செய்யும் வகையில் வெற்றிக்கொடிகட்டு படத்தில் சார்லி பார்த்திபனை பார்த்து, ஒரு 10 ரூபாய் கிடைக்குமா என்று கேட்பார். அதனை சார்லியாக பாகிஸ்தானை மாற்றி, "சும்மாவாச்சும் பவுலிங் போடுறீங்களா.. எப்பவாச்சும் பவுலிங்னா பரவலா.. எப்பவுமே பவுலினா எப்படி" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Fantastic Memes from Social Media after India Pakistan Match postponed to Reserve day due to Heavy Rain

நேற்றையா ஆட்டத்தில் மழை நின்ற பின் ஆடுகளத்தை உலற வைப்பதற்காக கொழும்பு மைதான ஊழியர்கள், டேபிளில் ஃபேனை வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இதனை ஐ படத்தில் விக்ரம் உடலை பார்த்து, "உனக்கே டஃப் கொடுப்பான் போலயே" என்று சொல்லுவார். அதனை மாற்றி, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை பார்த்து பிசிசிஐ சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற மாதிரி வேற மாதிரி ரகம்.

Story first published: Monday, September 11, 2023, 9:10 [IST]
Other articles published on Sep 11, 2023
English summary
India Pakistan Match: India vs Pakistan Match Postponed to Reserve day due to heavy rain. Even though Cricket fans creates super memes in Social media about India batting. Lets see some of them.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+