IND vs WI: சிறப்பான தரமான சம்பவம்.. பூரனுக்கு இப்படியொரு பிரச்சனையா.. ரசிகர்களின் தெறிக்கும் மீம்ஸ்!
ஃபுளோரிடா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், ஆட்டத்தின் சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 179 ரன்கள் இலக்கை இந்திய அணி 17 ஓவர்களில் சேஸ் செய்து மிரட்டியது. இந்த ஆட்டத்தில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். இதன் மூலம் முதல் டி20 அரைசதத்தை பதிவு செய்ததோடு, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இதனை ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா சொல்லும், "சிறப்பான தரமான சம்பவம்" வசனத்தை ரசிகர்கள் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவருமே அரைசதம் விளாசி அசத்தினர். இதனை மங்காத்தா படத்தில் வரும் அஜித்குமார், அர்ஜுன் இருவரும் பணத்தை கொள்ளையடித்து வந்த காட்சியை ஒப்பிட்டு, ரன்களை கொள்ளையடித்து வந்ததாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற மாதிரி ஃபீல்.

அண்மை காலமாக இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை சேர்த்து ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார். இதனால் சுப்மன் கில் மீதான விமர்சனங்கள் அதிகரித்த சூழலில், நேற்று அதிரடி அரைசதம் விளாசினார். இதனால் இந்திய கிரிக்கெட்டின் பிரின்ஸ் கம்பேக் கொடுத்ததாக, Return of the Prince என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மெர்சல்.

அதேபோல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசியதன் மூலம் சிறிய வயதில் டி20 கிரிக்கெட்டில் அரைசதம் அடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்திலும், திலக் வர்மா 2வது இடத்திலும், 3வது இடத்தில் ரிஷப் பண்ட்-ம் உள்ளனர். இதனால் ஜெய்ஸ்வால் ஜாம்பவான் வீரராக வருவதற்கான சுவடுகளை இப்போதே வெளிப்படுத்தி வருவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறி.

இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் டி20 கிரிக்கெட்டில் 3 முறை குல்தீப் யாதவ் பந்துவீச்சில் மட்டும் ஆட்டமிழந்திருக்கிறார். நேற்றைய ஆட்டத்திலும் குல்தீப் யாதவிடம் 4வது முறையாக ஆட்டமிழந்தார். இதனை போலீஸிடம் இருந்து தப்பித்து ஓடும் ஹிருத்திக் ரோஷனை பிடிக்க சிரித்துக் கொண்டே வரும் காவல்துறையாக பூரன், குல்தீப் யாதவை ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.



Click it and Unblock the Notifications