Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஓவர் த்ரோ வீசாம இருந்திருக்கலாம்.. குமுறும் ஆர்சிபி ரசிகர்கள்.. தெறிக்கும் முகமது சிராஜ் மீம்ஸ்

கொழும்பு: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா மறக்க முடியாத வெற்றியை பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டிக்கு பின் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் முகமது சிராஜ், 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் காரணமாக முகமது சிராஜிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அந்த விருதுடன் அறிவிக்கப்பட்ட ரூ.4.15 லட்சம் பணத்தை கொழும்பு மைதான பணியாளர்களுக்கு சிராஜ் நன்கொடையாக அளித்தார். இதனை அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசன், அந்த மனசு தான் சார் கடவுள் என்று வசனத்தை பொருத்தி உருவாக்கப்பட்டுள்ள மீம் சென்டிமென்டல் டச்.

Fantastic Memes from Social Media after India won by 10 Wickets against Srilanka in Asia Cup 2023 Finals

நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணி 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் உற்சாகமாக இருந்தாலும், ஆர்சிபி அணி ரசிகர்கள் சோகமாக இருந்தனர். 49 ரன்கள் என்ற சரித்திர புகழ்பெற்ற எண்ணை கடக்கவிட்டிருக்க கூடாது என்று பலரும் கொண்டாடினர். இதனை எல்ஐசி விளம்பரத்தில் வரும் "நீங்க மட்டும் ஒரு பாலிசி எடுத்திருந்தால்" என்று கணவர் புகைப்படத்தை பார்த்து மனைவி பேசுவார். அதனை அப்படியே மாற்றி, விராட் கோலி மட்டும் அந்த ஓவர் த்ரோ வீசாமல் இருந்திருந்தால்.. என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஈசாலா பாய்ஸின் குமுறல்.

Fantastic Memes from Social Media after India won by 10 Wickets against Srilanka in Asia Cup 2023 Finals

4வது ஓவரின் போது பவுலிங் செய்து கொண்டிருந்த சிராஜ், திடீரென தனஞ்செயா அடித்த பவுண்டரியையும் தடுக்க முயன்றார். அதற்காக பவுண்டரி எல்லை வரை சென்றார். இதனை பார்த்த விராட் கோலி வாயில் கையை வைத்து சிரிக்க, இந்திய அணி வீரர்கள் உற்சாகமாகினர். இதனை "ஹே.. எப்புட்ரா" என்று விராட் கோலி சிராஜை பார்த்து கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒவ்வொரு ரசிகனின் மனதின் குரல்.

Fantastic Memes from Social Media after India won by 10 Wickets against Srilanka in Asia Cup 2023 Finals

நேற்றைய ஆட்டத்தில் சிராஜின் ஒவ்வொரு பந்தும் இலங்கை வீரர்களின் விக்கெட்டை காவு வாங்கிக் கொண்டு இருந்தது. ஆனால் சிராஜ் 12வது ஓவரை வீசிய போது, திடீரென அவரது பந்தில் குசல் மெண்டிஸ் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். அவர் பேட் வீசிய விதமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்த பந்திலேயே அவரை ஸ்டம்புகள் சிதற விக்கெட்டாக்கினார் சிராஜ். இதனை சூது கவ்வும் படத்தில் ரமேஷ் திலக் போலீஸான வர்மாவை பார்த்து, "துப்பாக்கி காட்டுறேன்.. சிரிக்கிற" என்று முகத்தில் ஒரு அடி கொடுப்பார். அதனை மாற்றி, சிராஜ் சொலவது போல், "வாழ்க்கையோட பெஸ்ட் ஸ்பெல் போட்டுட்டு இருக்கேன்.. பேட்ட சுத்துற நீ" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Fantastic Memes from Social Media after India won by 10 Wickets against Srilanka in Asia Cup 2023 Finals

இந்திய அணி வெற்றிபெற வெறும் 51 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து பந்துவீச வந்த இலங்கை பவுலர்களால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. இதனை மாவீரன் படத்தில் இந்தி தெரியும் என்று பொய் சொல்லி வேலைக்கு சேரும் காட்சியில், அச்சா.. என்று இந்தியை படிப்பது போல் நடிப்பார். அதுபோல் 50 ரன்கள் இலக்கை பார்த்து அச்சா என்று இலங்கை பவுலர்கள் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

Fantastic Memes from Social Media after India won by 10 Wickets against Srilanka in Asia Cup 2023 Finals
Story first published: Monday, September 18, 2023, 9:59 [IST]
Other articles published on Sep 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+