Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. இதுதான் தீபாவளி பரிசு.. தெறிக்கும் விராட் கோலி, ரோகித் சர்மா மீம்ஸ்!

பெங்களூரு: இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Fantastic memes from Social media after india won by 160 runs against Netherlands in icc 50 over world cup

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் சதம் விளாசி அசத்தினர். இதனை வின்னர் படத்தில் கட்டதுரை ஆட்கள் வடிவேலுவை அடித்து ஆடைகளை உருவிய பின், மனுஷங்களாடா இவங்க.. ஒரு ஈவு இரக்கம் இல்லாமல் அடிக்கிறாங்க என்று சொல்லுவார். அதனை ஸ்ரேயாஸ் - கேஎல் ராகுல் இருவருக்கும் பொருத்தி நெதர்லாந்து பவுலர்கள் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Fantastic memes from Social media after india won by 160 runs against Netherlands in icc 50 over world cup

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள 9 லீக் போட்டிகளிலும் வென்றுள்ளது. ஒரே உலகக்கோப்பையில் இந்திய அணி தொடர்ந்து 9 போட்டிகளில் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதனை பரிதாபங்கள் சுதாகர் பாணியில், இப்படிதான் 2003 உலகக்கோப்பை மற்றும் 2007 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்றதாக கூறி உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்டகாசம்.

Fantastic memes from Social media after india won by 160 runs against Netherlands in icc 50 over world cup

நேற்றைய ஆட்டத்தில் திடீரென விராட் கோலியை அட்டாக்கில் கொண்டு வந்தார் ரோகித் சர்மா. அப்போது 25வது ஓவரை விராட் கோலி வீசுகையில், நெதர்லாந்து அணியின் நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதனை திருப்பாச்சி படத்தில் ரவுடிகளை சுடுவதற்கு ஒப்புதல் கொடுத்த பின் லிவிங்ஸ்டன், துப்பாக்கிக்கு முத்தமெல்லாம் கொடுத்து வேட்டையாடுவார். அதுபோல் திடீரென பவுலிங்கிலும் ஜாலியாக விராட் கோலி விக்கெட் வீழ்த்தியதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ் ரகம்.

Fantastic memes from Social media after india won by 160 runs against Netherlands in icc 50 over world cup

உலகம் முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் தீபாவளி பரிசை வழங்கினார்கள் என்றே சொல்லலாம். இருவரும் பேட்டிங்கில் அசத்திய பின், பவுலிங்கிலும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி காட்டினர். இதனால் மைதானத்தில் இருந்த இரு வீரர்களின் மனைவிகளும் உற்சாகமடைந்தனர். இதையடுத்து தீபாவளி ஸ்பெஷலாக இருவரும் பவுலிங் வீசியதாக இருவரின் புகைப்படங்களும் வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல் ரகம்.

Fantastic memes from Social media after india won by 160 runs against Netherlands in icc 50 over world cup

கடைசி விக்கெட்டை வீழ்த்த ரோகித் சர்மாவே அட்டாக் செய்தார். அந்த ஓவரின் 4வது பந்தில் நெதர்லாந்து அணியின் தேஜா சிக்ஸ் அடிக்க, உடனடியாக ஓவர் தி ஸ்டம்ப் லைனில் வந்து ரோகித் சர்மா பந்துவீசி விக்கெட்டை கைப்பற்றினார். இதனை கலகலப்பு படத்தில் சந்தானம் மற்றும் விமல் இருவரையும் ஏமாற்றியதாக மனோபாலா, "நான் போட்ட லெஃப்ட் மற்றும் ரைட்ல எப்படி மாறிருச்சு பார்த்தியா"என்று கூறுவார். அதனை மாற்றிப் ரோகித் சர்மா, "டேய்.. ரவுண்ட் தி விக்கெட்ல சிக்ஸ் அடிச்சுட்டான்.. ஓவர் தி விக்கெட்டில் வந்து கொளப்புறேன் பாரு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

Story first published: Monday, November 13, 2023, 8:48 [IST]
Other articles published on Nov 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+