Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”நீங்க தோனினு ஒத்துக்கிறோம்.. அதுக்காக இப்படிலாம் பண்ணாதீங்க” ஹர்திக்கை வெளுக்கும் குபீர் மீம்ஸ்!

குயானா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ள நிலையில், ஆட்டத்தின் சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

கடந்த சில போட்டிகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 44 பந்துகளில் 83 ரன்கள் விளாசி மிரட்டலான இன்னிங்ஸை ஆடினார். இதனை மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி சொல்லும், "இதைதான் எதிர் பார்த்தோம்" என்ற வசனத்தை, அப்படியே சூர்யகுமார் யாதவை பார்த்து இந்திய ரசிகர்கள் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ் ரகம்.

Fantastic Memes from Social Media after Indian won by 7 Wickets against West Indies in 3rd T20

நேற்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 44 பந்துகளில் 10 பவுண்டர், 4 சிக்சர்கள் உட்பட 83 ரன்க்ள் குவித்தார். இதற்கு முன் 2வது டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவின் தோளில் கைவைத்து ஆவேஷ் கான் ஆர்வமாக பேசிக் கொண்டிருந்ததை போல் புகைப்படம் வெளியாகியது. இதனை ஒப்பிட்டு, சூர்யகுமார் யாதவின் ஆட்டத்திற்கு காரணமே ஆவேஷ் கான் வழங்கிய ஆலோசனை தான் என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆர்சிபி ரசிகர்களின் நக்கல் ரகம்.

Fantastic Memes from Social Media after Indian won by 7 Wickets against West Indies in 3rd T20

திலக் வர்மா 49 ரன்களில் இருந்த போது, ஹர்திக் பாண்டியா சிக்சர் விளாசி ஆட்டத்தை முடித்தார். இந்த புகைப்படத்தையும் விராட் கோலியை ஃபினிஷ் செய்ய வேண்டும் என்பதற்காக தோனி விட்டு கொடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு மீம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தோனி - விராட் கோலி புகைப்படத்தை வைத்து "Friend i want" என்றும், ஹர்திக் பாண்டியா - திலக் வர்மா புகைப்படத்தை வைத்து "Friend i got" என்றும் எழுதப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Fantastic Memes from Social Media after Indian won by 7 Wickets against West Indies in 3rd T20

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அறிமுகமான திலக் வர்மா, முதல் டி20 தொடரிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு அரைசதம் உட்பட மொத்தமாக 139 ரன்களை விளாசியுள்ள திலக் வர்மாவை ரசிகர்களும், இந்திய அணி ஜாம்பவான்களும் பாராட்டி வருகின்றனர். இதனை வைத்து ஜகமே தந்திரம் படத்தில் வரும், "தொடக்கம்.. இனிய தொடக்கம்" என்று திலக் வர்மாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறி.

Fantastic Memes from Social Media after Indian won by 7 Wickets against West Indies in 3rd T20

கடைசி பந்தில் சிக்சர் அடித்து ஹர்திக் பாண்டியா ஆட்டத்தை முடித்து, திலக் வர்மா அரைசதம் விளாசும் வாய்ப்பில் மண்ணை அள்ளி போட்டார். அதனை கிண்டல் செய்யும் வகையில் பரிதாபங்கள் சுதாகர் ஹர்திக்கை பார்த்து, "ஐயா நீங்க தோனி தான்னு நாங்க ஒத்துக்கிறோம். ஆனால் தயவு செஞ்சு இப்படிலாம் பண்ணாதீங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

Fantastic Memes from Social Media after Indian won by 7 Wickets against West Indies in 3rd T20
Story first published: Wednesday, August 9, 2023, 10:20 [IST]
Other articles published on Aug 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+