For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ருதுராஜ் தன்னோட சான்ச சிறப்பாக பயன்படுத்திக்கிட்டு வர்றாரு... உற்சாகமா இருக்கு.. தோனி பாராட்டு

அபுதாபி : நேற்றைய ஐபிஎல்லின் 49வது லீக் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து போட்டியிட்ட சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 53 பந்துகளில் 72 ரன்களை குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.

இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருவதாக அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 49வது லீக் போட்டி

ஐபிஎல் 49வது லீக் போட்டி

நேற்றைய ஐபிஎல்லின் 49வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதின. பிளே-ஆப் சுற்றுக்கு இன்னும் ஒருசில போட்டிகளே உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் கேகேஆர் அணி இருந்த நிலையில், சிஎஸ்கேவிடம் தோல்வியுற்றுள்ளது.

72 ரன்கள் குவிப்பு

72 ரன்கள் குவிப்பு

முதலில் ஆடிய கேகேஆர் அணி 173 ரன்களை இலக்காக அளித்த நிலையில் தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கேவின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா போன்றவர்கள் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்துள்ளனர். முக்கியமாக ருதுராஜ் கெய்க்வாட் 53 பந்துகளில் அடித்த 72 ரன்கள் அணி சிறப்பாக வெற்றி பெற உதவியது.

அடுத்த தொடருக்கு உதவும்

அடுத்த தொடருக்கு உதவும்

வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தோனி, பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை என்றாலும் இதுவரை விளையாடாத இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு வருவதாகவும், இது அடுத்த தொடருக்கு சிறப்பாக உதவும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையில், தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை ருதுராஜ் சிறப்பாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தோனி பாராட்டு

தோனி பாராட்டு

போட்டியை சிறப்பாக முடித்துக் கொடுத்த ஜடேஜா இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருவதாகவும் தோனி பாராட்டு தெரிவித்தார். முக்கியமாக இறுதி ஓவர்களில் அவர் ரன்களை எடுப்பதை தோனி சுட்டிக் காட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய தோனி, பிளே-ஆப்பிற்கு தகுதி பெறவில்லை என்றாலும் இந்த தொடரில் தங்களது சிறப்பை வெளிப்படுத்துவது முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Friday, October 30, 2020, 7:35 [IST]
Other articles published on Oct 30, 2020
English summary
It was very important for us to give it our best -Dhoni
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+