Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்டிஷனா சொல்லிப்புட்டேன், கடைசி டெஸ்ட்டுக்கு எனக்கு 500 டிக்கெட் அவசியமா வேணும்... சச்சின்

மும்பை: தன்னுடைய கடைசி மற்றும் 200வது டெஸ்ட் போட்டியை குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் காணும் வகையில் தனக்காக பிரத்யேகமாக 500 டிக்கெட்களை ஒதுக்கித் தருமாறு (தள்ளுமாறு!) மும்பை கிரிக்கெட் சங்கத்தை சச்சின் டெண்டுல்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே கொல்கத்தாவில் நடைபெறவுள்ள சச்சினின் 199வது டெஸ்ட் போட்டிக்காக, ஏகப்பட்ட ஓசி டிக்கெட்களை பெங்கால் கிரிக்கெட் சங்கம் ஒதுக்கியுள்ள நிலையில் சச்சின் தனது 200வது போட்டிக்கு 500 டிக்கெட்களைக் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை வாங்கடே மைதானத்தில்தான் சச்சின் தனது கடைசி டெஸ்ட் போட்டியி்ல் ஆடவுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

24 வருஷ கிரிக்கெட் வாழ்க்கை

24 வருஷ கிரிக்கெட் வாழ்க்கை

தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையை வாங்கடே மைதானத்தில் வைத்து முடிக்கவுள்ளார் சச்சின்.

நேரில் போய் 500 டிக்கெட் கேட்டார்

நேரில் போய் 500 டிக்கெட் கேட்டார்

இந்தநிலையில் மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரிகளை நேற்று நேரில் சந்தித்தார் டெண்டுல்கர். அப்போது தனக்காக 500 டிக்கெட்களை ஒதுக்கித் தருமாறு அவர் முறைப்படி கோரிக்கை வைத்தார்.

நவம்பர் 14ம் தேதி தொடக்கம்

நவம்பர் 14ம் தேதி தொடக்கம்

சச்சின் ஆடவுள்ள இந்த 200வது டெஸ்ட் போட்டியானது, இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டியாகும். கொல்கத்தாவில் அதற்கு முன்பு முதலாவது போட்டி நவம்பர் 6 முதல் 10ம்தேதி வரை நடைபெறும்.

அம்மா வருகிறார்

அம்மா வருகிறார்

சச்சினின் கடைசிப் போட்டியைக் காண அவரது தாயார் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு ரேம்ப் அமைக்கக் கோரிக்கை

சிறப்பு ரேம்ப் அமைக்கக் கோரிக்கை

சச்சினின் தாயார் வீல் சேரில்தான் நடமாடுகிறார் என்பதால் அவருக்கு வசதியாக ஒரு ரேம்ப் அமைத்துத் தருமாறும் சச்சின் கோரியுள்ளார்.

அனைத்து வசதியும் செய்ய சங்கம் உறுதி

அனைத்து வசதியும் செய்ய சங்கம் உறுதி

இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் நிதின் தலால் கூறுகையில் சச்சின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கண்டிப்பாக செய்யப்படும். அவரது தாயாருக்காக பிரத்யேகமாக ரேம்ப் அமைக்கவும் ஏற்பாடு செய்வோம் என்றார்.

என்னுடைய படத்தையே கிப்ட்டாக கொடுங்கள்...

என்னுடைய படத்தையே கிப்ட்டாக கொடுங்கள்...

மேலும் தனது கடைசிப் போட்டியின்போது தனது ஓவியத்தையே மும்பை கிரிக்கெட் சங்கத்திடமிருந்து பரிசாகப் பெற விரும்புவதாகவும் சச்சின் கோரியுள்ளாராம்.

ஸ்டேடியத்தைச் சுற்றிலும் கட் அவுட்

ஸ்டேடியத்தைச் சுற்றிலும் கட் அவுட்

இதற்கிடையே, சச்சின் டெண்டுல்கரின் கட் அவுட்கள் ஸ்டேடியத்தைச் சுற்றிலும் போட்டி நாட்களின்போது வைக்கப்படவுள்ளதாம். இதை மும்பை கிரிக்கெட் சங்கமே ஏற்பாடு செய்கிறது.

டிக்கெட்டில் சச்சின் போட்டோ

டிக்கெட்டில் சச்சின் போட்டோ

மேலும் போட்டிக்கான டிக்கெட்டில் சச்சினின் புகைப்படம் மற்றும் 51 டெஸ்ட் சதங்களின் ஸ்கோரையும் பிரசுரிக்கவுள்ளனராம்.

Story first published: Tuesday, October 22, 2013, 14:06 [IST]
Other articles published on Oct 22, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+