Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"விவசாயி தோனி".. தல விளைவித்த பயிர்களுக்கு செம வரவேற்பு.. கொள்முதல் செய்யும் துபாய்.. ஆச்சர்யம்!

துபாய்: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி விளைவித்த பயிர்களை வாங்கிக்கொள்ள அபுதாபி விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி, கிரிக்கெட் மட்டுமின்றி வேறு பல விஷயங்களிலும் ஆர்வம் காட்ட கூடியவர். பைக் ஓட்டுவது, ஹெலிகாப்டர் ஓட்டுவது, பாரா கிளைடிங், ராணுவ பயிற்சி என்று பல விஷயங்களில் தோனி ஆர்வம் காட்ட கூடியவர்.

அதிலும் இந்திய ராணுவத்திலும் தோனி மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்திய ராணுவத்தின் பாரா கிளைடிங் பிரிவில் இவர் முறையான பயிற்சி பெற்றவர்.

விவசாயம்

விவசாயம்

ராணுவம் போலவே இன்னொரு பக்கம் விவசாயத்திலும் தோனி ஆர்வம் கொண்டவர். தனது பண்டை வீட்டில் விவசாயம் செய்ய வேண்டும் என்பதற்காகவே நிலம் வாங்கி வைத்து இருக்கிறார். பல ஏக்கர் நிலத்தில் நெல் மற்றும் கோதுமை பயிரிட்டு வருகிறார்.

சிறப்பு

சிறப்பு

இயற்கை விவசாய முறைப்படி இவர் விவசாயம் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாக இவர் விளைவித்த பயிற்சிகளை ஜார்கண்டில் உள்ளூரில் விற்பனை செய்து வந்து இருக்கிறார். இவரின் பயிர்களுக்கு கிடைத்த வரவேற்பை முன்னிட்டு தற்போது ஜார்கண்ட் அரசு இவருக்கு ஆதரவு அளித்துள்ளது.

ஆதரவு

ஆதரவு

ஆம் இவரின் பயிர்களை வாங்கிக்கொள்ள அபுதாபியில் உள்ள சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். துபாய் அரசின் விருப்பத்தின் பெயரில் இவரின் பயிர்களை வாங்கிக்கொள்ள சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் முன்னிட்டு தோனி விளைவித்த பயிர்களை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய ஜார்கண்ட் மாநில அரசு உதவி செய்யும் என்று தெரிவித்துள்ளது.

உதவி

உதவி

இந்த பயிர்கள் துபாயில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதை ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று ஜார்க்கண்ட் அரசு தெரிவித்துள்ளது. நெல், கோதுமை மட்டுமின்றி தோனி தனது தோட்டத்தில் ஸ்டராபெரி, முட்டைகோஸ், தக்காளி, பிராக்கோலி, பப்பாளி, மாம்பழம், கொய்யா உள்ளிட்ட காய்களையும் விளைவித்து வருகிறார்.

Story first published: Sunday, January 3, 2021, 14:21 [IST]
Other articles published on Jan 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+