Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அறிமுக ஆட்டத்தில் வேகமான சதம்.. தென்னாப்பிரிக்க வீரர் புதிய சாதனை!

Recommended Video

சபாஷ் தென்னாப்பிரிக்கா...இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது!- வீடியோ

டெல்லி: ஒருதினப் போட்டிகளில் அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்ததுடன், மிகவும் வேகமாக சதம் அடித்த சாதனையை தென்னாப்பிரிக்காவின் ரீசா ஹென்ரிக்ஸ் படைத்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் தென்னாப்பிரிக்கா விளையாடி வருகிறது. இலங்கையில் நடக்கும் இந்தத் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா வென்றது. நேற்று நடந்த மூன்றாவது போட்டியிலும் வென்று தென்னாப்பிரிக்கா தொடரை கைப்பற்றியது.

fastest century in the debut odi record by hendricks

தென்னாப்பிரிக்காவின் ரீசா ஹென்ரிக்ஸ். இந்த ஆட்டத்தில் 89 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். 88 பந்துகளில் சதமடித்ததன் மூலம், அறிமுகப் போட்டியில் சதமடித்த 14வது வீரரானார். அறிமுகப் போட்டியில் சதமடித்த மூன்றாவது தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இதைத் தவிர அறிமுகப் போட்டியில் மிகவும் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் பெற்றார் ஹென்ரிக்ஸ். இதற்கு முன் யுஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹாங்காங் அணியின் மார்க் சாம்ப்மான் 103 பந்துகளில் சதமடித்திருந்தார்.

இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் அறிமுகப் போட்டியில் சதமடித்த ஒரே இந்திய வீரராக உள்ளார்.

Story first published: Monday, August 6, 2018, 16:28 [IST]
Other articles published on Aug 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+