ரோஜர் வழியில் ஸ்டூவர்ட்... இந்தியாவுக்காக ஆடிய அப்பா, மகன்கள்...!
ஹாமில்டன்: ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி, இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியில் அவர் ஆடியதன் மூலம் நாட்டுக்காக ஆடிய தந்தை -மகன் வரிசையில் பின்னியும் இணைந்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஆட்டக்காரராக திகழ்ந்தவரான ரோஜர் பின்னியின் மகன்தான் ஸ்டூவர்ட் பின்னி.
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவரான ஸ்டூவர்ட் அதன் மூலம் தற்போது இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார்.

3வது தந்தை - மகன்
இந்தியாவுக்காக ஆடிய மூன்றாவது தந்தை - மகன் ஜோடி என்ற பெயர் ரோஜர் பின்னிக்கும், ஸ்டூவர்ட் பின்னிக்கும் கிடைத்துள்ளது.

யோகராஜ் - யுவராஜ் சிங்
இதற்கு முன்பு யோகராஜ் - யுவராஜ் சிங் ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடியுள்ளனர்.

சுனில் கவாஸ்கர் - ரோஹன் கவாஸ்கர்
அதேபோல சுனில் கவாஸ்கரும், ரோஹன் கவாஸ்கரும் இந்திய அணியில் இடம் பெற்று ஆடியுள்ளனர்.

3வது ஜோடியாக ரோஜர் -ஸ்டூவர்ட்
இந்த வரிசையில் தற்போது ரோஜர் பின்னியும், ஸ்டூவர்ட் பின்னியும் இணைந்துள்ளனர்.

ரஞ்சியிலும் கலக்கியவர்
29 வயதான ஸ்டூவர்ட் பின்னி ரஞ்சிப் போட்டியிலும் இந்த முறை சிறப்பாக செயல்பட்டிருந்தார். கூடவே ஐபிஎல் போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடவே இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸுக்காக அவர் ஆடினார். ரஞ்சியில் கர்நாடகத்திற்காக ஆடினார்.

முதல் உலகக் கோப்பையில் ரோஜர்
இந்தியாவின் முதல் உலகக் கோப்பை 1983ம் ஆண்டு கிடைத்தது. அப்போதைய கபில் தேவ் தலைமையிலான அணியில் முக்கிய வீரராக இருந்தவர் ரோஜர்.

72 ஒரு நாள் போட்டி - 27 டெஸ்ட்
இந்தியாவுக்காக 72 ஒரு நாள் போட்டிகளிலும் 27 டெஸ்ட் போட்டிகளிலும் ரோஜர் ஆடியுள்ளார்.

கவாஸ்கரின் பங்கு 108
கவாஸ்கர் இந்தியாவுக்காக 108 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். ரோஹன் கவாஸ்கர் 11 போட்டிகளில்தான் ஆடியுள்ளார்.

யோகராஜின் பங்கு 6 போட்டிகள்
யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் இந்தியாவுக்காக 6 ஒரு நாள் போட்டிகளில்தான் ஆடியுள்ளார். ஆனால் மகன் யுவராஜ் சிங் 293 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.


Click it and Unblock the Notifications