Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது அப்பாவோடது இல்ல மா.. செய்தியாளர் சந்திப்பில் நடந்த சேட்டை.. தந்தையர் தின ஸ்பெஷலில் உஸ்மான் கவாஜா

பர்மிங்காம் : இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவும் அவரது மகளும் செய்த சேட்டை தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆசஸ் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்பதற்காக ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்ட உஸ்மான் கவாஜா மீண்டும் அதே நாட்டில் சென்று இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.

Fathers Day special - Usman Khawaja and his Daughter catches the lime light in press conference

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தற்போது வலுவான நிலையில் இருக்கிறது. இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்தைவிட ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. கைவசம் ஐந்து விக்கெட்டுகள் இருக்கிறது. இதனால் இன்றைய ஆட்டம் படுஜோராக இருக்கும் ஐந்து விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த வேண்டும் என்று இங்கிலாந்தும் முன்னிலை பெற வேண்டும் என்று ஆஸ்திரேலியாவும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை உஸ்மான் கவாஜா சந்திக்கும்போது தனது அன்பு மகளையும் அழைத்து வந்தார். பொதுவாக வீரர்கள் பேசுவதை பத்திரிகையாளர்கள் தங்கள் செல்போன் மூலம் ரெக்கார்டு செய்வது வழக்கம். இந்த நிலையில் உஸ்மான் கவாஜா செய்தியாளர்களை சந்திக்கும் போது பத்திரிக்கையாளர்களின் செல்போன் அங்கு இருந்தது.

Fathers Day special - Usman Khawaja and his Daughter catches the lime light in press conference

இதனை பார்த்த அவரது மகள் செல்போனை எடுத்து விளையாடத் தொடங்கினார். இதனைப் பார்த்த உஸ்மான் கவாஜா ஐயோ இது அப்பாவோடது இல்லம்மா நம்ம போன் அங்கே இருக்கு. இந்த போனின் போட்டோக்களை எல்லாம் பார்க்க வேண்டாம் என்று கூறினார். இதைக் கேட்டதும் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சிரித்தனர்.

மேலும் தனது மகள் ஆயிஷா என்னை விட்டு செல்ல மாட்டார் என்பதற்காகவே அவரையும் செய்தியாளர் சந்திப்புக்கு அழைத்து வந்ததாக உஸ்மான் கவாஜா கூறியுள்ளார். தனது மகள் சோகமாக இருந்ததை பார்த்த உஸ்மான் கவாஜா இரண்டு நிமிடம் தான்.நாம் அம்மாவிடம் சென்றுவிடலாம் என்று கூறினார். இந்த சம்பவம் பத்திரிக்கையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Story first published: Sunday, June 18, 2023, 13:34 [IST]
Other articles published on Jun 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+