Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானின் சூப்பர் ஸ்டார் பாபர் அசாம் இல்லை.. பாத்திமா சனாதான்.. முன்னாள் வீரர் அதிரடி பேச்சு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய உண்மையான சூப்பர் ஸ்டார் பாபர் அசாம் அல்ல, அந்நாட்டின் மகளிர் அணி கேப்டன் பாத்திமா சனாதான் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரரும், மகளிர் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான முகமது வசீம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக பாகிஸ்தான் ஆண்கள் அணி படுதோல்விகளை சந்தித்து வருகிறது. அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற சிறிய அணிகளிடம் மட்டுமே வெற்றி பெறும் பாகிஸ்தான் வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா என மற்ற அணிகளிடம் படுதோல்விகளை சந்தித்து வருகிறது. இதில் நட்சத்திர வீரர் பாபர் அசாமின் ஆட்டமும் மோசமாக உள்ளது. பாகிஸ்தான் மகளிர் அணி தோல்விகளை சந்தித்தாலும் அந்த அணியின் கேப்டன் பாத்திமா சனா சிறப்பாகவே ஆடி வருகிறார்.

Fatima Sana is the Pakistan Superstar Than Babar Azam Says Ex-Pakistan Coach Mohammad Wasim

இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசிய முகமது வசீம், உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு பாத்திமா சனாவின் உழைப்பும் திறமையும் நன்றாகப் புரியும் என்றார். "சர்வதேச அரங்கிலும் ஊடகங்களிலும் பாபர் அசாமை விட பாத்திமா சனாவுக்கே அதிக நன்மதிப்பு உள்ளது. களத்தில் காட்டும் சிறப்பான செயல்பாட்டின் மூலமாகவே புகழையும் மரியாதையையும் சம்பாதிக்க முடியும்.

பாகிஸ்தான் மகளிர் அணி தோல்வியைத் தழுவினாலும் கூட, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பாத்திமா சனா தனியாளாகப் போராடி சர்வதேச அளவில் பாராட்டைப் பெறுகிறார். ஆனால் பாகிஸ்தான் ஆடவர் அணி வீரர்களின் செயல்பாடுகள் படுமோசமாக இருப்பதால் அவர்களுக்கு வெளிநாட்டு ஊடகங்களில் போதிய பாராட்டு கிடைப்பதில்லை. எனவே தற்போது பாகிஸ்தானின் ஒரே சூப்பர் ஸ்டார் பாத்திமா சனாதான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்று வசீம் குறிப்பிட்டார்.

உலகின் தலைசிறந்த மகளிர் ஆல்ரவுண்டர்களில் ஒருவராகத் திகழும் பாத்திமா சனா, இதுவரை 134 சர்வதேச போட்டிகளில் விளையாடி 157 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் கீழ்வரிசையில் பேட்டிங் செய்து 1500-க்கும் மேற்பட்ட ரன்களையும் சேர்த்துள்ளார்.

சிஎஸ்கே-வை வைத்து மேட்ச் பிக்ஸிங் செய்ததாக சர்ச்சை.. அவசரக் கூட்டம் கூட்டும் CSK நிர்வாகம்!

சிஎஸ்கே-வை வைத்து மேட்ச் பிக்ஸிங் செய்ததாக சர்ச்சை.. அவசரக் கூட்டம் கூட்டும் CSK நிர்வாகம்!

மறுபுறம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்ததால் பாபர் அசாம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். பார்ம் இழந்து தவிக்கும் அவர் தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தொடங்கியுள்ளார்.

Story first published: Thursday, September 24, 2026, 9:44 [IST]
Other articles published on Sep 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+