ஒரேயொரு ஒரு போட்டோ..! பரபரத்த கிரிக்கெட் உலகம்.. விழுந்தடித்து விளக்கம் சொன்ன அந்த வீரர்
கேன்பரா: தான் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்டை தவறாக புரிந்து கொள்ளப் பட்டுள்ளது என்று ஆஸ்திரேலிய அணி ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னர். ஆஸ்திரேலிய அணிக்காக 1 டெஸ்ட், 69 ஒருநாள், 24 டி 20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2015ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரின் ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியில் ஆட்டநாயகன் விருது வென்றார் பால்க்னர்.
கடைசியாக இலங்கை அணிக்கு எதிராக 2017ம் ஆண்டு நடைபெற்ற டி 20 போட்டியில் பங்கேற்றார். அதன் பின் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை.

பால்க்னர் பிறந்த நாள்
இந்நிலையில் அவர் தனது 29வது பிறந்தநாளை கொண்டாடினார். தன் தாயுடனும், ஆண் நண்பருடன் கொண்டாடிய பால்க்னர், அது தொடர்பான போட்டோ ஒன்றை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இணையத்தில் போட்டோ
அந்த போட்டோ இணையத்தில் வைரலாக பரவியது. பால்க்னர் ஒரு கே என்று செய்திகள் பரவின. அதற்கு ஆதாரமாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை பதிவிட்டு கருத்துகள் வெளியாகின.
தவறான புரிதல்
இந்நிலையில் தான் ஒரு கே இல்லை என்றும் அந்த பதிவு, தவறாக புரிந்து கொள்ளப் பட்டதாகவும் பால்க்னர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

சிறந்த தோழர்
நான் வெளியிட்ட போஸ்ட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிகிறது. நான் ஒரு கே இல்லை. ஆனால் ஓரின சேர்க்கையாளர்களின் பெரிய ஆதரவு கிடைத்தது. அந்த போட்டோவில் இருப்பவர் எனது சிறந்த நண்பர் என்று குறிப்பிட்டுளார்.


Click it and Unblock the Notifications