எல்லாமே கனவுமாதிரி இருக்கு... டி20 அணியில் இடம்பெற்ற சூர்யகுமார் யாதவ் மகிழ்ச்சி டிவீட்!
மும்பை : இந்தியா -இங்கிலாந்து இடையிலான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் இந்திய அணியில் தன்னுடைய அறிமுக டி20 போட்டியில் விளையாடவுள்ளார்.
இந்நிலையில் நிகழ்பவை அனைத்தும் கனவு போல உள்ளதாக சூர்யகுமார் யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டி20 இந்திய அணி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுமுகங்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் டிவாட்டியா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஐபிஎல்லில் அதிரடி
கடந்த ஐபிஎல் போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்த வாய்ப்பை இவர்கள் அடைந்துள்ளனர். கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி சூர்யகுமார் யாதவ் 480 ரன்களை குவித்திருந்தார். தற்போது விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் சிறப்பான போட்டிகளை அளித்து வருகிறார்.

சூர்யகுமார் மகிழ்ச்சி டிவீட்
இந்நிலையில் இந்தியாவின் டி20 தொடரில் இடம்பெற்றுள்ளது கனவு போல உள்ளதாக சூர்யகுமார் யாதவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மும்பையின் டிஒய் படேல் மைதானத்தில் தான் அமர்ந்திருக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டு இந்த கேப்ஷனை வெளியிட்டுள்ளார்.

மார்ச் 12ல் துவக்கம்
இந்தியா -இங்கிலாந்து இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி மோதேரா மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இதையடுத்து டி20 தொடர் வரும் மார்ச் 12ம் தேதி துவங்கி அனைத்து போட்டிகளும் அங்கேயே நடைபெறவுள்ளது. இந்த தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications