Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கால்பந்து இறுதி போட்டியில் யாருக்கு ஆதரவு.. பிரான்ஸ், அர்ஜென்டினாவா ? கேப்டன் ராகுல் காமெடி பதில்

கத்தார் : ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. நடப்புச் சாம்பியனான பிரான்ஸ் அணியும் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியும் பல பரிசை நடத்துகின்றன.

இதில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தனது கடைசி உலக கோப்பை ஆட்டத்தில் விளையாடுகிறார்.

உலக கோப்பையை வென்று சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாட உள்ளார்.

 இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

அர்ஜென்டினா அணி கடைசியாக 1986 ஆம் ஆண்டு தான் உலக கோப்பையை வென்றது. தற்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு அந்த அணிக்கு கிடைத்துள்ளது. பிரான்சை பொறுத்தவரை தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதி போட்டியில் விளையாடுகிறது. உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் எந்த அணியும் கடைசி 60 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை கோப்பையை வென்றதில்லை.

காமெடி பதில்

காமெடி பதில்

இந்த சாதனையை பிரான்ஸ் முறியடிக்குமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தற்காலிக கேப்டன் கே எல் ராகுலிடம், பத்திரிக்கையாளர் சந்திப்பில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் நீங்கள் யாருக்கு ஆதரவு அளிக்க போகிறீர்கள் என்று கேட்கப்பட்டது .இதற்கு பதில் அளித்த ராகுல் நாங்கள் ஆதரவளித்த அணிகள் எல்லாம் ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறி விட்டதாக பதில் அளித்தார்.

ஒன்றாக பார்ப்போம்

ஒன்றாக பார்ப்போம்

இதனைக் கேட்டாலும் அங்கிருந்த செய்தியாளர்கள் கலகலவென சிரித்தனர். இதனை தொடர்ந்து பேசிய கே எல் ராகுல், எங்கள் அணியில் சில பிரேசில் ரசிகர்களும், சிலர் இங்கிலாந்து அணியின் ரசிகர்களும் இருந்தனர். அதனால் எனக்கு யார் அர்ஜென்டினா ரசிகர்கள் , பிரான்ஸ் ஆதரவாளர்கள் என்று தெரியாது. எனினும் இன்றைய ஆட்டத்தை நாங்கள் உற்சாகமாக அமர்ந்து காண இருக்கிறோம்.

மிகவும் பிடிக்கும்

மிகவும் பிடிக்கும்

இறுதிப்போட்டியில் எங்கள் அணி வீரர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க முடிவெடுத்திருக்கிறார்கள். ஒரு நல்ல விருந்தை சாப்பிட்டு விட்டு மேட்சை பார்க்க இருக்கிறோம்.கடந்த ஐந்து நாட்களாக கடுமையாக விளையாடி சோர்வாக இருக்கிறோம். எனவே இன்றைய பொழுது நாங்கள் மகிழ்வுடன் கழிக்க இருக்கிறோம். எங்கள் அனைவருக்கும் கால்பந்து மிகவும் பிடிக்கும்.

கால்பந்தே விளையாடுவோம்

கால்பந்தே விளையாடுவோம்

அதனால் உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை நாங்கள் அனைவரும் பார்ப்போம்.நாங்கள் அனைவருமே பயிற்சியின் போது கால்பந்தாட்டம் தான் விளையாடுவோம். இன்றைய ஆட்டத்தை பொறுத்தவரை சிலர் ஒரு அணிக்கும் சிலர் மற்றொரு அணிக்கும் ஆதரவளிப்பார்கள். எனவே அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் போது ஜாலியாக இருக்கும் என்று ராகுல் கூறினார்.

Story first published: Sunday, December 18, 2022, 20:07 [IST]
Other articles published on Dec 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+