பேட்டிங்கில் இங்கிலாந்தின் பின்வரிசை பெஸ்ட்..இந்தியாவின் முன்வரிசை வேஸ்ட்
லண்டன் : இந்திய இங்கிலாந்து அணிக்களிக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 332 ரன்களை எடுத்தது. இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்துள்ளது.
போட்டியின் இரண்டாம் நாளில் நடைபெற்ற டாப் 5 நிகழ்வுகள்

1 பட்லரின் அதிரடி
இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் பட்லர் நேற்று அதிரடியாக ஆடி 89 ரன்களை குவித்தார். அவர் இங்கிலாந்து அணியின் ஸ்கோரை 181/7 என்ற நிலையில் இருந்து 332 வரை கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது. நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய அவர் 11 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.
2 தொடர்ந்து சோதிக்கும் இங்கிலாந்து லோயர் ஆர்டர் பேட்டிங்
கடந்த நான்கு டெஸ்ட்களை போலவே இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியின் கடைசி வரிசை பேட்டிங் அதிக ரன்களை குவித்துள்ளது. அந்த அணியின் 7-11 வரிசை வீரர்கள் முதல் இன்னிங்சில் 142 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.
3 மீண்டும் சொதப்பிய இந்திய ஓப்பனிங் பேட்டிங்
இந்திய அணியின் தொடக்க வரிசை மீண்டும் ஒருமுறை சறுக்கியது. தொடக்க வீரர் தவான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். சற்று சிறப்பாக விளையாடிய ராகுல் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவர் கூட இன்னமும் இந்த தொடரில் ஒரு அரைசத்தை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4 கோஹ்லி தவறவிட்ட அரைசதம்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி நேற்றைய போட்டியில் 49 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார்.
5 தொடர்ந்து தடுமாறும் ரிஷப் பந்த்
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தனது முதல் ரன்னை சிக்ஸராக அடித்து தனது டெஸ்ட் வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவர் பேட்டிங்கில் அணிக்கு தேவையான பங்களிப்பை அளிக்க தொடர்ந்து தவறி வருவது அவரது இடத்தை கேள்விக்குறியாக்கும் என்பதில் ஐயமில்லை..
Story first published: Sunday, September 9, 2018, 10:17 [IST]
Other articles published on Sep 9, 2018


Click it and Unblock the Notifications