போராடி தோற்ற இந்தியா..ஐந்தாவது டெஸ்ட்.. கடைசி நாள் ஹைலைட்ஸ்
லண்டன் : இந்திய அணியின் நீண்ட இங்கிலாந்து தொடர் முடிவுக்கு வந்துவிட்டது. இந்திய அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, இந்திய அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.
ஐந்தாம் நாள் போட்டியில் நிகழ்ந்த டாப் 5 நிகழ்வுகள்

1 ராகுலின் அபாரமான ஆட்டம்
நேற்றைய ஆட்டத்தில் 46 ரன்களை எடுத்திருந்த ராகுல் இன்று தனது ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். ஆசிய கண்டத்திற்கு வெளியில் அவர் அடிக்கும் முதல் சதம் இதுவேயாகும். மேலும் இந்த தொடரில் சதம் அடித்த ஒரே இந்திய தொடக்க வீரர் இவரே ஆவார். ராகுல் சிறப்பாக விளையாடி 149 ரன்களில் ஆட்டமிழந்தார்.
2 ரிஷப் பண்ட்-இன் முதல் சதம்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை விளாசினார். அவர் சிக்ஸர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்தது குறிப்பிடத்தக்கது. குறைந்த வயதில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றார்.
3 நம்பிக்கை தந்த ராகுல் - பண்ட் பார்ட்னெர்ஷிப்
இந்திய அணி 121 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த போது அனைவரும் இந்திய அணி விரைவில் ஆல் அவுட் செய்யப்படும் என்றே எண்ணினர். ஆனால் அதன் பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட், கேஎல் ராகுலுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் ஆறாவது விக்கெட்டிற்கு 214 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் களத்தில் இருக்கும்வரை வெற்றி இந்திய அணியின் வசமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
4 ஆண்டர்சனின் சாதனை
இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய அணி வீரர் ஷமி விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுத்த 564 விக்கெட் ஆகும். இதன் மூலம் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வேகபந்துவீச்சாளர் என்ற பெருமையை மெக்ராத்திடம் இருந்து தட்டி பறித்தார்.
5 கடைசி போட்டியில் ஆட்டநாயகன் விருது
ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக அலஸ்டர் குக் தேர்ந்து எடுக்கப்பட்டார். தன்னுடைய கடைசி டெஸ்டில் ஆட்டநாயகன் விருது பெற்ற 8ஆவது வீரர் குக் என்பது குறிப்பிடத்தக்கது. விருதுடன் கூடிய வெற்றியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து கொண்டார் குக்.
Story first published: Wednesday, September 12, 2018, 11:04 [IST]
Other articles published on Sep 12, 2018


Click it and Unblock the Notifications