Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெருக்கடி நேரத்துல சிறப்பா செயல்பட்ட கேப்டன்... 24வது அரைசதத்தை அடித்து விளாசல்!

சென்னை : இந்தியா -இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா ஆடி வருகிறது.

இதில் அடுத்தடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 179 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.

இந்நிலையில் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது 24வது அரைசதத்தை கடந்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. 5வது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி ஆடி வருகிறது. 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் கோலி அரைசதத்தை கடந்துள்ளார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த், சத்தீஸ்வர் புஜாரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி அஸ்வின் ஆகியோர் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பான பேட்டிங்கை தரத் தவறியுள்ளனர். முதல் இன்னிங்கில் 1 ரன் எடுத்த துணை கேப்டன் இந்த இன்னிங்சில் டக் அவுட் ஆகியுள்ளார்.

72 ரன்களை குவித்த கோலி

72 ரன்களை குவித்த கோலி

ஆனால் முதல் இன்னிங்சில் 11 ரன்களில் அவுட்டான கேப்டன் விராட் கோலி, தற்போது மற்ற வீரர்கள் சொதப்பிய நிலையில் தனது பொறுப்புணர்ந்து விளையாடினார். அவர் 104 பந்துகளில் 72 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் இந்திய அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆயினும் அவருக்கு ஈடுகொடுத்து ஆட வீரர்கள் இல்லாத நிலையில் ஸ்டோக்ஸ் பௌலிங்கில் விராட் அவுட்டாகியுள்ளார்.

24வது அரைசதம்

24வது அரைசதம்

தற்போது அரைசதத்தை கடந்துள்ள கோலி, இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 24வது அரைசதத்தை எட்டியுள்ளார். இதில் 6 பவுண்டரிகளும் அடக்கம். இதன்மூலம் சேப்பாக்கத்தின் இந்த முதல் டெஸ்ட் போட்டியை தன்னுடைய கட்டுப்பாட்டில் சிறிது நேரம் வைத்திருந்தார் விராட் கோலி.

Story first published: Tuesday, February 9, 2021, 14:47 [IST]
Other articles published on Feb 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+