Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விஜய் சங்கரை சீக்கிரம் களமிறக்கிய ரோஹித்.. கோபப்பட்ட தினேஷ்.. கடைசி நேரத்தில் நடந்த குழப்பம்

Recommended Video

ரோஹித்தின் முடிவால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட குழப்பம்- வீடியோ

சென்னை: முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் தினேஷ் கார்த்திக்குக்கும், ரோஹித் சர்மாவிற்கும் கடைசி நேரத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கிறது. விஜய் சங்கரை முன்பாக களம் இறக்கியது பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியின் கடைசி இரண்டு ஓவரில் மொத்தம் தினேஷ் கார்த்திக் 8 பந்துகள் பிடித்தார். இதில் 3 சிக்ஸ் 2 பவுண்டரி அடித்தார், மொத்தம் 362.50 ஸ்டிரைக் ரேட்டுடன் 29 ரன்கள் எடுத்தார்.

அவர் வாழ்நாளில் மிக சிறப்பான ஆட்டத்தை ஆடி இந்தியாவிற்கு வெற்றியை தேடி கொடுத்தார். இந்திய அணி இவரை மிக அதிக அளவில் புறக்கணித்துள்ளது. கடைசி போட்டியில் கூட தாமதமாக இறக்கப்பட்டார்.

மோசமான முடிவு

மோசமான முடிவு

இந்த போட்டியில் ரோஹித் சர்மா கடைசி நேரத்தில் மிகவும் மோசமான முடிவு ஒன்று எடுத்தார். விஜய் சங்கர் சிறந்த வீரர் என்றாலும், அனுபவம் இல்லாத அவரை மிகவும் இக்கட்டான நிலையில் தினேஷுக்கு முன்பாக இறக்கிவிட்டார். அவர் ஏன் அப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று யாருக்கும் தெரியவில்லை.

சண்டை

சண்டை

இதனால் தினேஷ் கார்த்திக் கோபத்தில் இருந்துள்ளார். ஏற்கனவே தினேஷ் கார்த்திக் 6வது வீரராக களமிறங்குகிறார். வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியிலும் தினேஷ் கார்த்திக்தான் கடைசி நேரத்தில் உதவினார். ஆனால் இந்த போட்டியில் களமிறக்காததால் அவர் கோபத்தில் இருந்துள்ளார்.

கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை

கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை

மேலும் தினேஷ் கார்த்திக் வெற்றிக்கு வழிவகுப்பார் என்றும் ரோஹித்துக்கு நம்பிக்கை இல்லை. கடைசி பாலில் 5 ரன் தேவைப்பட்ட போது, சூப்பர் ஓவர் விளையாட வேண்டும் என்று ரோஹித் ஆடை மாற்றி இருக்கிறார். கடைசி பந்தில் என்ன நடந்தது என்பதையே ரோஹித் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதிரடி

அதிரடி

தினேஷ் கார்த்திக் அதிரடிக்கு பின் இந்த கோபமும் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று பந்துகளை பறக்கவிட்டு இருக்கிறார். அதேபோல் வின்னிங் ஷாட் மூலம் தன்னை எதிர்த்த கொல்கத்தா நைட் ரசிகர்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

Story first published: Tuesday, March 20, 2018, 11:35 [IST]
Other articles published on Mar 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+