கிரிக்கெட் விளையாட்டின்போது சண்டை.. துப்பாக்கிச் சூடு.. டெல்லியில் பரபரப்பு!
டெல்லி: டெல்லியில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட சண்டை பெரும் கலவரமாக மாறி விட்டது. இதில் துப்பாக்கிச் சூடு வரை ஒருவர் போய் விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தெற்கு டெல்லியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனி என்ற இடத்தில் சில இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரண் குஜ்ரால் என்பவர் அடித்த பந்து அருகில் உள்ள வீட்டில் போய் விழுந்து விட்டது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்தவர்களுக்கும், குஜ்ராலுக்கும் இடையே மோதல் வெடித்தது.

அது திடீரென பெரும் மோதலாக மாறியது. அப்போது கரண் குஜ்ரால் தனது துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்து விட்டார். 3 ரவுண்டுகள் அவர் சுட்டார். அப்போது அருகில் இருந்த இன்னொரு இளைஞர் கரண் கையைப் பிடித்து துப்பாக்கியை மேல் நோக்கி திருப்பியதால் குண்டு யார் மீதும் படவில்லை.
இந்த சம்பவத்தில் பூனம், திலீப் என சிலர் காயமடைந்தனர். இந்த விவகாரம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கரண் குஜ்ரால் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications