Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றியை நழுவவிட்டது இந்தியா... டிராவில் முடிந்தது கொல்கத்தா த்ரில் டெஸ்ட்

கொல்கத்தா: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வந்தது. முதல் இன்னிங்சில் சறுக்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் மீண்டு வந்தது.

முதல் இரண்டு நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த இரண்டு நாள் ஆட்டமும் தடையில்லாமல் நடந்துள்ளது. இலங்கை அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக கலக்கியது.

இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியதன் மூலம் இந்திய அணி இலங்கைக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்து இருந்தது. மிகவும் த்ரில்லாக சென்ற இந்த போட்டி தற்போது டிராவில் முடிந்து இருக்கிறது.

சொதப்பிய இந்தியா

சொதப்பிய இந்தியா

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-இலங்கை நடுவே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது . டாஸ் வென்ற இலங்கை பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்தது.கோஹ்லி, கே.எல் ராகுல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். இந்தியா பேட்ஸ்மேன்கள் முதல் நாள் போட்டியில் மிகவும் சொதப்பினார்கள். அவர்களை விட மைதானத்தில் மழை நன்றாகவே விளையாடியது.

மோசமான பேட்டிங்

மோசமான பேட்டிங்

இரண்டாவது நாள் ஆட்டத்திலும் அதிக முறை மழை குறுக்கிட்டது. உணவு இடைவேளைக்கு பின் ஒரு பந்து கூட போடப்படாமல் போட்டி முடிந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் திரும்பி சென்றனர். போட்டியை பார்க்க வந்த ரசிகர்களும் மழை காரணமாக வந்த வேகத்தில் திரும்பி சென்றனர். இரண்டு அணிக்கும் இரண்டாவது நாள் ஏமாற்றமாக இருந்தது.

இந்திய அணி சுருண்டது

இந்திய அணி சுருண்டது

தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக புஜாரா 52 ரன்கள் எடுத்தார். அதன்பின் களம் இறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் இருந்து மாஸ் காட்டியது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை 10 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர் குமார், ஷமி பவுலிங்கில் மாஸ் காட்டி தலா நான்கு விக்கெட்டுகள் எடுத்தனர்.

231 ரன்கள் இலக்கு

231 ரன்கள் இலக்கு

இரண்டாவது இன்னிங்ஸ் ஆட வந்த இந்திய அணி ஒருநாள் போட்டி போல அதிரடியாக ஆடியது. சிறப்பாக விளையாடிய தவான் 94 எடுத்து அவுட் ஆனார். கோஹ்லி சிறப்பாக ஆடி 104 ரன்கள் எடுத்தார்.

இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த நிலையில் இலங்கை 231 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வந்தது.

டிராவில் முடிந்த டெஸ்ட்

டிராவில் முடிந்த டெஸ்ட்

சிறப்பான இந்திய பவுலிங் காரணமாக இலங்கை அணி திணறியது. வரிசையாக இலங்கை பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் அவுட் ஆனார்கள். இலங்கை 75 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து திணறியது. முகமது ஷமி 2 விக்கெட்டுகள் எடுத்தார். புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் நினைத்த சூழ்நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. போட்டி நேரம் முடிவடைந்ததால் டிரா என்று அறிவிக்கப்பட்டது.

Story first published: Monday, November 20, 2017, 17:05 [IST]
Other articles published on Nov 20, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+