ஐதராபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடர்களின் கடைசி ஆட்டம் ஐதரபாத்தில் இன்று இரவு நடக்க உள்ளது. ஒருதினப் போட்டித் தொடரைப் போலவே டி-20 தொடரையும் வெல்ல இந்திய அணி தயாராக உள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் 5 ஒருதினப் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டித் தொடரில் பங்கேற்ற வந்துள்ளது. ஒருதினப் போட்டித் தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
