சென்னை அணியின் தொடர் வெற்றி ரகசியம் என்ன...? முதன் முறையாக மனம் திறக்கும் தல தோனி
Recommended Video
சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்பதை தல தோனி முதன் முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.
சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
வார்னர் 57 ரன்கள் எடுத்தார். மணீஷ் பாண்டே 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். தொடர்ந்து ஆடிய சென்னை அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் பந்துகளை பேயாட்டம் ஆடி.... ரன்களை குவித்தார். 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.

சிஎஸ்கே வெற்றி
ஒரு பந்து மீதமிருக்கையில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 16 புள்ளிகளுடன் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றது.

தொடரும் சக்சஸ்
ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து சென்னை அணியின் வெற்றி என்பது யாரும் மறக்க முடியாத மற்றும் மறுக்க முடியாத ஒன்று. தொடர் வெற்றி, கோப்பை என சக்சஸ் அணியாக திகழ்வதில் சென்னை நிகர் எந்த அணியும் இல்லை.

வெற்றி ரகசியம்
அப்படிப்பட்ட வெற்றி எப்படி கிடைக்கிறது....? தோனியின் வெற்றி மந்திரம் என்ன என்று மண்டையை பிய்த்து கொள்ளாத ஆளே இல்லை. தற்போது அந்த ரகிசயத்தை நேற்றைய போட்டியின் முடிவில் பேட்டி அளிக்கையில் கூறியிருக்கிறார் தோனி.

தனி நபர்
அவர் கூறியதாவது:சென்னை அணிக்கு சில சமயம் தனி நபரால் வெற்றி கிடைக்கிறது. பல சமயம் அணியாக, கூட்டு முயற்சியாக வெற்றி பெறுகிறோம்.

மகிழ்ச்சியான விஷயம்
வெற்றி என்பதை அணியை பொறுத்த வரை மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். ஹைதரா பாத் அணிக்கு எதிரான போட்டியில் வாட்சன் மேட்ச் வின்னர். சில போட்டிகளில் சிறப்பாக இல்லை என்றாலும் அவர் திறமையானவர்.

எடுக்கமாட்டார்கள்
சென்னை அணியின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்கிறீர்கள்? அதை வெளியில் சொல்லி விட்டால்... என்னை யாரும் எந்த அணிக்காகவும் ஏலத்தில் எடுக்க மாட்டார்கள்.

சொல்லவே மாட்டேன்
அது ஒரு பெரிய ரகசியம். ரசிகர்கள் மற்றும் நிர்வாகத்தின் ஆதரவு, சென்னை அணி பணியாளர்கள் என அணியின் வெற்றியில் அனைவரின் பங்கும் இருக்கிறது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் வரை அதை சொல்லமாட்டேன் என்றார்.


Click it and Unblock the Notifications