For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என் டர்பனை அணிந்து இருக்கலாமே.. மீண்டு வா நேசா.. நேசமணிக்காக ஹர்பஜன் உருகுவதை பாருங்கள்!

தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் இருக்கும் காண்டிராக்டர் நேசமணிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங் டிவிட் செய்து இருக்கிறார்.

Recommended Video

#Pray_For_Nesamani மீண்டு வா நேசா.. நேசமணிக்காக உருகிய ஹர்பஜன்- வீடியோ

சென்னை: தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் இருக்கும் காண்டிராக்டர் நேசமணிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங் டிவிட் செய்து இருக்கிறார்.

நாடு முழுக்க #pray_for_neasamani ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேல் செய்த ''ஆணியே புடுங்க வேண்டாம்'' காமெடி காரணமாக தற்போது இது டிரெண்டாகி வருகிறது.

நேற்று இது தேசிய அளவில் முதல் இடம் பிடித்து டிரெண்டானது. பலர் இதில் வகை வகையாக டிவிட் செய்து வருகிறார்கள்.

நடந்தது என்ன

நடந்தது என்ன

நேற்று முதல்நாள் இன்ஜினியரிங் தொடர்பான பேஸ்புக் பக்கம் ஒன்றில் சுத்தியல் படத்தை பகிர்ந்து, இதை உங்கள் மொழியில் எப்படி அழைப்பீர்கள் என்று ஒருவர் கேட்டு இருந்தார். அதற்கு பல நாடுகளை சேர்ந்த மக்கள் பதில் அளித்து இருந்தனர். தமிழர்களும் சுத்தியல் என்று பதில் அளித்தனர்.

என்ன பதில்

என்ன பதில்

இதற்கு விக்னேஷ் பிரபாகர் என்ற நபர் பதில் அளித்து இருந்தார். அதில், இதன் பெயர்தான் சுத்தியல். நாம் இதை வைத்து அடிக்கும் போது டங் டங் என்று சத்தம் வரும். இதை வைத்து பெயிண்டிங் கான்டிராக்டர் நேசமணியின் தலை ஜமினில் உடைக்கப்பட்டது. அவரது மருமகன்தான் தலையை உடைத்தது. பாவம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

வைரலானது

வைரலானது

இது நேற்று இணையம் முழுக்க வைரலானது. இதை வைத்து #pray_for_neasamani என்ற டேக் உருவாக்கபட்டது. பலர் #pray_for_neasamani என்று டேக்கில் போஸ்ட் போட தொடங்கினார்கள். இதனால் #pray_for_neasamani இந்திய அளவில் டிரெண்டாகி முதல் இடம் பிடித்தது. சில நிமிடம் உலக டிரெண்டிலும் #pray_for_neasamani இருந்தது.

பிரபலம் பலர்

பிரபலம் பலர்

இந்த நிலையில் இதற்காக பல பிரபலங்கள் டிவிட் செய்ய தொடங்கினார்கள். பலர் #pray_for_neasamani என்று டிவிட் செய்து கொண்டே வந்தனர். மிகவும் சீரியசான பிரபலங்கள்,துறையில் இருக்கும் நபர்கள் கூட #pray_for_neasamani என்று டிவிட் செய்து கொண்டாடிக்கொண்டு இருந்தனர்.

ஹர்பஜன் டிவிட்

இதை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜனும் இந்த ஜோதியில் ஐக்கியமானார். இவர், என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani 💛, என்று டிவிட் செய்துள்ளார்.

எப்போதும் தமிழ்

எப்போதும் தமிழ்

பொதுவாக தமிழில் ஹர்பஜன் அதிகமாக டிவிட் செய்வது வழக்கம். இவர் தமிழில் செய்யும் டிவிட்டுகள் எல்லாம் இணையத்தில் பெரிய வைரலாகும். பல முறை மிக மிக காமெடியான டிவிட்டுகளை இவர் தமிழில் செய்து இருக்கிறார். அப்படித்தான் நேற்று இவர் செய்த டிவிட்டும் வைரலாகி உள்ளது.

Story first published: Thursday, May 30, 2019, 10:49 [IST]
Other articles published on May 30, 2019
English summary
Finally Harbhajan Singh tweets in Pary For Neasamani in his own style.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+