Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்

இஸ்லாமாபாத் : இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்து விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணிக்கு திரும்பாத நிலையில், அவருக்கு மாற்றாக மணீஷ் பாண்டே சிறப்பாக செயல்படுவதாகவும், ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக விளையாடுவதாகவும் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் ஐபில் போட்டிகளில் விளையாடியுள்ளதால் நெருக்கடிகளை சமாளிக்கும் திறனை அவர்கள் பெற்றுள்ளதாகவும் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். மேலும் புகழுக்காக விளையாடாமல் மிகப்பெரிய போட்டிகளையும் எளிதாக கையாண்டு வருவதாகவும் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

பாராட்டுகளை பெற்ற வீரர்கள்

பாராட்டுகளை பெற்ற வீரர்கள்

இந்திய அணியில் புதிய இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு, அவர்களின் திறன்கள் சோதித்து அறியப்பட்டு வருகிறது. இதற்கான களமாக டி20யை எடுத்துக் கொண்டுள்ளதாக கேப்டன் விராட் கோலியும் தெரிவித்திருந்தார். இத்தகைய வாய்ப்புகளை ஒருசில வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

கவனம் பெறும் ஐயர்

கவனம் பெறும் ஐயர்

இந்த வரிசையில் மணீஷ் பாண்டே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் போன்ற இளம் வீரர்கள் தற்போது தங்களது திறனை வெளிப்படுத்தி அணியில் சிறப்பான இடத்தை பிடித்து வருகின்றனர்.

பல்வேறு யூகங்கள்

பல்வேறு யூகங்கள்

கடந்த 6 மாதங்களாக சர்வதேச போட்டிகளில் இருந்து ஒதுங்கியுள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மாற்று வீரராக ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்கள் பார்க்கப்பட்டு வருகின்றனர்.

சொதப்பும் ரிஷப் பந்த்

சொதப்பும் ரிஷப் பந்த்

கடந்த 6 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி விலகியுள்ள நிலையில், அவருக்கு மாற்றாக ரிஷப் பந்த் பார்க்கப்பட்டு, அவருக்கு பல சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆயினும் அவர் தனக்கான வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை.

சோயிப் அக்தர் பாராட்டு

சோயிப் அக்தர் பாராட்டு

இந்நிலையில் முன்னாள் கேப்டன் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் தன்னுடைய யூ-டியூப் சேனலில் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் குறித்து அவர் பல்வேறு வீடியோக்களை அதில் பதிவிட்டு வருகிறார்.

சோயிப் அக்தர் கருத்து

சோயிப் அக்தர் கருத்து

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், இறுதியாக தோனிக்கு மாற்று வீரர் கிடைத்து விட்டதாக சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

தோனிக்கு மாற்று மணீஷ் பாண்டே

தோனிக்கு மாற்று மணீஷ் பாண்டே

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முன்னாள் கேப்டன் தோனிக்கு மாற்றாக மணீஷ் பாண்டே சிறப்பாக செயல்படுவதாக சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளம் வீரர்கள் குறித்து சோயிப்

இளம் வீரர்கள் குறித்து சோயிப்

இந்த வீரர்கள் ஐபிஎல் போட்டிகளை விளையாடியுள்ளதால் நெருக்கடியான சூழல்களை திறமையாக சமாளித்து, விளையாடுவதாகவும் புகழுக்காக விளையாடாமல் போட்டிகளை திறம்பட கொண்டு செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, January 21, 2020, 20:51 [IST]
Other articles published on Jan 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+