Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பை ரத்தாச்சுன்னா எல்லாமே கெட்டு போயிடும் -பிசிபி தலைவர் எச்சரிக்கை

இஸ்லாமாபாத் : ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடர் ரத்தானால் ஐசிசி நிதி நிலைமை மிகவும் மோசமாக மாறிவிடும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மற்றும் ஐசிசி நிதி மற்றும் வணிக விவகாரங்கள் குழுவின் தலைவருமான ஈசான் மணி, திட்டமிட்டபடி டி20 உலக கோப்பை நடத்தப்படுவது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை தொடர் ரத்தானால் அதன்மூலம் ஐசிசி அதன் உறுப்பினர்கள், போர்டுகள் ஆகியவற்றிற்கு அளிக்கும் நிதி பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடைபெறுவதில் சிக்கல்?

நடைபெறுவதில் சிக்கல்?

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் -நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடரை மூடிய அரங்கத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்ந்தால், டி20யின் தலையெழுத்து கேள்விக்குறியாகும். இதனால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஐசிசி நிதிக்குழு தலைவர் கருத்து

ஐசிசி நிதிக்குழு தலைவர் கருத்து

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த தொடர் ரத்தானால், ஐசிசியின் நிதிநிலைமை மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி நிதி மற்றும் வணிக விவகாரங்கள் குழுவின் தலைவர் ஈசான் மணி கூறியுள்ளார்.

ஈசான் மணி கருத்து

ஈசான் மணி கருத்து

பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் தொடர்களுக்கு ஐசிசி சார்பில், நிதி வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடர் கைவிடப்பட்டால், பொருளாதாரரீதியாக ஐசிசி மிகவும் பாதிப்புக்குள்ளாகும் என்றும், ஐசிசி, அதன் உறுப்பினர்கள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உள்ளிட்ட போர்டுகளுக்கு வழங்கும் நிதி பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஈசான் மணி திட்டவட்டம்

ஈசான் மணி திட்டவட்டம்

இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் எந்த பிடித்தமும் செய்யப்படாது என்றும் மணி உறுதிப்பட தெரிவித்துள்ளார். சர்வதேச அல்லது உள்ளூர் பாகிஸ்தான் வீரர்கள் தான் வாரியத்தின் சொத்து என்றும் அவர்களின் சந்தோஷம் மிகவும் முக்கியம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, April 15, 2020, 15:19 [IST]
Other articles published on Apr 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+