ஆரம்பத்தில் பயந்து நடுங்கினாலும்...அழகான ஃபிப்டி போட்ட பின்ச்!
சிட்னி: இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின் விதம் விதமான பந்து வீச்சைப் பார்த்து பயந்து நடுங்கி ஆரம்பத்தில் தடுமாறிய அதிரடி வீரர் ஆரோன் பின்ச் அழகான 50 ரன்களைப் போட்டு நிலைத்து விட்டார்.+

டாஸ் தோற்றதாலோ என்னவோ, இந்தியாவின் வேகப் பந்து வீச்சில் நிறையவே அனல் பறந்தது. இந்த அனலில் தொடக்க ஆட்டக்காரர்களின் பார்ட்னர்ஷிப் செமையாக குழம்பிப் போனது என்னவோ உண்மை.
- டேவிட் வார்னர் நமது பந்து வீச்சைத் தப்பாகக் கணித்து அவுட்டானார்.
- இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் பின்ச் படு உஷாராக ஆடினார்.
- பந்தை அடிப்பதை, வேண்டாமா என்பதிலேயே அவருக்குப் பெரும் குழப்பம் இருந்தது.
- ஷமி பந்து வீச்சிலும், உமேஷ் யாதவ் பந்து வீச்சிலும் ரொம்பவே குழம்பியிருந்தார் பின்ச். இதனால் நிதானித்தார்.
- பந்துகளைச் சாப்பிட்டு வந்த பின்ச் பாதுகாப்பான பந்து என்று கருதினால் மட்டுமே அதை அடித்தார்.
- அதேசமயம் ஸ்டீவ் ஸ்மித் இந்தியப் பந்து வீச்சை சிறப்பாக சமாளித்து அரை சதம் போட்டார். பயமில்லாமலும் விளையாடினார்.
- தொடக்கத்தில் தடுமாறினாலும், கட்டையைப் போட்டாலும் கூட முக்கியமான ரன்களைச் சேகரித்து விட்டார் பின்ச்.
- அரை சதம் போட்டு தொடர்ந்து ஆடி வருகிறார் பின்ச்.
- பின்ச்சை சீக்கிரம் தூக்காவிட்டால் பெரிய ஸ்கோருக்கு அவர் போய் விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
- மறுபக்கம் ஸ்மித் பெரிய ஸ்கோரை வேகமாக நெருங்கி வருகிறார்.
Story first published: Thursday, March 26, 2015, 10:53 [IST]
Other articles published on Mar 26, 2015


Click it and Unblock the Notifications