Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Aus 3rd ODI: 10 இன்னிங்சுக்கு பிறகு பார்முக்கு வந்த பின்ச்… அப்பாடா… ஆஸி.க்கு நிம்மதி

ராஞ்சி:இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அருமையான தொடக்கத்தை தந்திருக்கிறது. அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 10 இன்னிங்சுக்கு பிறகு அரைசதம் எடுத்துள்ளார்.

இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஹைதராபாத், நாக்பூரில் நடந்த முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி 6 விக்கெட் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கியது. போட்டியில் தொடரை கைப்பற்றும் நோக்கத்தில் இந்திய அணியும், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணியும் தங்களது முழு திறனை வெளிப்படுத்தும் போட்டியாக அமையும்.

ஆஸி. தொடக்கம்

ஆஸி. தொடக்கம்

போட்டிக்கான டாஸ் இரு அணி கேப்டன் முன்னிலையில் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு பணித்தார்.

நிதானமாக ஆட்டம்

நிதானமாக ஆட்டம்

தொடக்க வீரர்களாக பின்ச்சும், கவாஜூம் களம்இறங்கினர். வென்றாக வேண்டிய போட்டி என்பதால் மிக நிதானமாக ஆஸ்திரேலியா ஆட்டத்தை தொடர்ந்தது.

எளிதாக ரன்கள் சேர்ப்பு

எளிதாக ரன்கள் சேர்ப்பு

இருவரும் இந்திய பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினால் அணியின் மற்ற வீரர்களை கட்டுப்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்திய வீரர்கள் பந்துவீசினர்.

50 ரன்கள்

50 ரன்கள்

ஆனால்.... பின்சும், கவாஜூம் பந்துவீச்சை அழகாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். 59 பந்துகளில் ஆஸ்திரேலியா அணி 50 ரன்களை எட்டியது. 17வது ஓவரில் 100 ரன்களை கடந்தது.

நிதானமாக ஆடிய பின்ச்

நிதானமாக ஆடிய பின்ச்

பின்ச்சும், கவாஜூம் அருமையான தொடக்கம் தந்தனர். கடந்த பல போட்டிகளில் தொடர்ந்து சொதப்பிய பின்ச் நிதானமாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் ஆடினார்.

பார்முக்கு வந்த பின்ச்

பார்முக்கு வந்த பின்ச்

6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 51 பந்துகளில் 50 ரன்களை எடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். கடந்த 10 இன்னிங்சுகளில் அரைசதம் எடுக்காமல் தடுமாறிய அவர், ராஞ்சி ஆட்டத்தில் அரை சதத்தை கடந்தது அணியினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Story first published: Friday, March 8, 2019, 15:49 [IST]
Other articles published on Mar 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+