Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்து ஆரோன் பின்ச் புதிய சாதனை!

Recommended Video

ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்து ஆரோன் பின்ச் புதிய சாதனை!- வீடியோ

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் அதிரடியாக ஆடி சதமடித்தார். கூடவே புதிய சாதனையும் படைத்தார்.

ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையியேயான முத்தரப்பு தொடரின் 3ஆவது ஆட்டம் இன்று ஹராரேவில் நடைபெற்றது.

finch slams new record

டாசில் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். துவக்க ஆட்டக்கார்களாக ஆரோன் பின்ச் மற்றும் டி ஆர்கி ஷார்ட் களமிறங்கினர். ஆரோன் பின்ச் தொடக்கம் முதலே மிகவும் அதிரடியாக ஆடினார்.

ஜிம்பாப்வே பந்து வீச்சை தவிடு பொடியாக்கிய அவர் 172 ரன்களை குவித்து உலக சாதனை படைத்தார். இதில் 16 பௌண்டரிகளும், 10 சிக்ஸர்களும் அடங்கும். 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களை குவித்தது.

ஆரோன் பின்ச் அடித்த 172 ரன்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிபட்ச ரன்கள் ஆகும். இது ஒரு சர்வதேச டி20 பேட்டிங் சாதனை. இதை அவர் 76 பந்துகளில் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முந்தைய சாதனையையும் அவரே படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அவர் இங்கிலாந்துக்கு எதிராக 156 ரன்களை குவித்ததே உலக சாதனையாகும். தற்போது அதனை அவரே முறியடித்துள்ளார்.

அதேசமயம், ஐபிஎல் உள்ளிட்ட ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் கெயில் அடித்த 175 ரன்கள்தான் அதிகபட்சமாக உள்ளது. அந்த சாதனையை 3 ரன்களில் தவற விட்டார் ஆரோன் பின்ச்.

இந்த போட்டியில் தனிப்பட்ட முறையில் அவர் மேலும் ஒரு சாதனையையும் படைத்துள்ளார். ஒரு போட்டியில் அணியின் மொத்த ரன்களில் அதிகப்படியான பங்களிப்பை அளித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் தனது அணியின் ஸ்கோரில் 75.10% பங்களிப்பை அளித்துள்ளது ஒரு சாதனையாகும்.

அணியின் மொத்த ஸ்கோர்: 229

பின்ச் தனிப்பட்ட ஸ்கோர்: 172

Story first published: Tuesday, July 3, 2018, 16:16 [IST]
Other articles published on Jul 3, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+