அடுத்தடுத்து 3 "மேன் ஆப் தி மேட்ச்".. கலக்கி வரும் ஆரோன் பின்ச்!
மும்பை: நடப்பு ஐபிஎல் தொடர், குஜராத் லயன்ஸுக்கான தொடராக இருக்குமோ என்று எண்ணும் வகையில் அந்த அணி அட்டகாசமாக ஆடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் தான் ஆடிய 3 போட்டிகளிலும் ஆட்ட நாயகன் பட்டம் பெற்று அசத்தியுள்ளார்.
டி20 நிபுணரான பின்ச், நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அட்டகாசமாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 67 ரன்களைக் குவித்து தனது அணியை வெற்றி பெறச் செய்தார்.
இது இந்தத் தொடரில் அவர் போடும் 3வது அரை சதமாகும். அதாவது இந்தத் தொடரில் அவர் விளையாடிய 3 போட்டிகளிலுமே அரை சதம் போட்டுள்ளார்.

3-3-3
இந்தத் தொடரில் குஜராத் லயன்ஸ் அணி இதுவரை தான் ஆடிய 3 போட்டிகளிலும் வென்றுள்ளது. ஆரோன் பின்ச் 3 போட்டிகளிலும் அரை சதம் போட்டுள்ளார். 3 போட்டிகளிலும் அவர்தான் மேன் ஆப் தி மேட்ச்.

74-50
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பின்ச் 74 ரன்களை விளாசியிருந்தார். அடுத்து புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 50 ரன்களை எடுத்திருந்தார்.

67
நேற்றைய மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 67 ரன்களைக் குவித்தார். இந்தப் போட்டியிலும் இவரது ஆட்டமே அணியின் வெற்றிக்கு உதவியது.

3
3 போட்டிகளிலும் தொடர்ந்து பின்ச்தான் ஆட்ட நாயகன் என்பதுதான் இதில் கூடுதல் விசேஷம். எனவே பின்ச் அடித்து ஆடி ரன் குவித்தால் அந்த ஆட்டத்தில் குஜராத்துக்கு வெற்றி என்பதும் இந்த் தொடரில் நமக்குக் கிடைத்துள்ள கூடுதல் செய்தி.


Click it and Unblock the Notifications