Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பினிஷராக விளையாடுவது ஒரு சூதாட்டம்.. தோல்விக்கான பொறுப்பை ஏற்கிறேன்: டோணி விரக்தி

கான்பூர்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக இந்திய அணி கேப்டன் டோணி தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய முதல் ஒருநாள் போட்டியில், 304 என்ற வெற்றி இலக்கை விரட்டிச் சென்ற இந்தியாவுக்கு, கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

அப்போது கேப்டன் டோணி களத்தில் நின்றார். ஆனால் அந்த ஓவரில் அவர் அவுட் ஆன நிலையில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

டோணி மீது எதிர்பார்ப்பு

டோணி மீது எதிர்பார்ப்பு

டோணி அவுட் ஆன அடுத்த பந்திலேயே, பின்னியையும் வேகப்பந்து வீச்சாளர் ரபடா அவுட் செய்து, தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். டோணி கடைசி ஓவரில் களத்தில் நின்றபோது, இந்தியாவை எப்படியும் அவர் வெற்றிபெறச் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

கிரேட் பினிஷர்

கிரேட் பினிஷர்

கிரிக்கெட் உலகில், டோணி பினிஷர் என்று அழைக்கப்பட கூடியவர். தென் ஆப்பிரிக்காவின் க்ளூசினர், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவன், பாகிஸ்தானின் அப்துல் ரசாக் போன்று, லோவர்-மிடில் ஆர்டரில் இறங்கி ஆட்டத்தை தனது அணிக்கு வெற்றிகரமாக முடித்துக்கொடுக்கும் ஆற்றல் பெற்றவராக டோணி புகழப்படுபவர். முன்பு, பல போட்டிகளில் டோணி அதை செய்துள்ளார்.

என்ன ஆச்சு

என்ன ஆச்சு

டோணி சமீபகாலமாக பினிஷர் என்ற நிலையை இழந்துவிட்டது அவரது ஆட்டத்தை உற்று பார்ப்போருக்கு தெரியும். பேட்டில் படும் பந்துகள், பழைய வேகத்தில் பறப்பதில்லை என்பதை அவரது ரசிகர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். நேற்றைய தோல்வியும், டோணியின் பெயருக்கு பின்னால் புதிதாக சேர்ந்த ஒரு இழுக்காகவே பார்க்கப்படுகிறது.

சில நேரங்களில் முடியாது

சில நேரங்களில் முடியாது

இதனிடையே டோணி கூறியது: கடைசியில் நான் களத்தில் நின்றதால், வெற்றி பெற்றுத்தந்திருக்க வேண்டியதும் எனது பொறுப்புதான். ஆனால், சில நேரங்களில் அது முடியாமல் போவதும் சகஜம். எத்தனையோ போட்டிகளை வென்று தந்திருந்தாலும், வெல்ல முடியாத போட்டிதான் மக்கள் மனங்களில் நீடித்து நிற்கும். நான், இங்கிலாந்து மற்றும், இலங்கைக்கு எதிரான 2 போட்டிகளில்தான் இதற்கு முன்பு நான் பினிஷ் செய்ய முடியாமல் போனது.

சூதாட்டம்

சூதாட்டம்

பினிஷர் என்ற முறையில் களமிறங்குவது ஒரு சூதாட்டம் போன்றது. சில நேரங்களில் நினைத்தது நடக்கும். சில நேரங்களில் நடக்காமல் போகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். இவ்வாறு டோணி தெரிவித்தார்.

Story first published: Monday, October 12, 2015, 16:19 [IST]
Other articles published on Oct 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+